செய்திகள் :

TVK : `கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட...' - சீமானுக்கு தவெக பதில்!

post image
விஜய் - பிரஷாந்த் கிஷோர் சந்திப்பை 'பணக்கொழுப்பு' என சீமான் விமர்சித்திருந்தார். இந்நிலையில், சீமானின் விமர்சனத்துக்கு தவெக சார்பில் பதில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், 'கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட அண்ணன் சீமான்..' என நாதகவை கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள்.
விஜய்

தவெகவின் கொள்கைப் பரப்பு இணைச்செயலாளரான சம்பத் குமார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், '*அறிக்கை*

ஊடகவியலாளர்கள் ஒலிவாங்கியை நீட்டிவிட்டால் அண்ணன் சீமான் எதையாவது உளறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்.

சமகால சமூகச் சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் வியூக வடிவமைப்பாளர்களை நியமிப்பதன் அவசியத்தை புரிந்துகொள்ளாமல் பணக் கொழுப்பு என்று பகிரங்கமாக அறிவித்துள்ள அண்ணன் சீமானுக்கு நடைமுறை அரசியல் யதார்த்தம் புரியவில்லை என்று தான் அர்த்தமாகிறது.

ஒவ்வொரு தேர்தலிலும் கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட அண்ணன் சீமான் இன்னும் எத்தனை ஆண்டுகள் "வென்றால் மகிழ்ச்சி,.தோற்றால் பயிற்சி" என்று நாம் தமிழர் உறவுகளை உசுப்பேத்திக் கொண்டே இருக்கப் போகிறாரோ தெரியவில்லை?

திரள் நிதி வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள அண்ணன் சீமானுக்கு திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தவறாக தெரிவது ஆச்சரியமன்று.

அண்ணே, நாங்கள் சட்டமன்றத்தில் பேசுவதற்காக அரசியல் செய்கிறோம், நீங்கள் பட்டிமன்றத்தில் பேசுவது தான் அரசியல் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.

விஜய்

நாங்கள் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறுவது எப்படி என்று சிந்திக்கிறோம் நீங்கள் தமிழ்தேசிய அரசியலை எப்படி வெற்றி பெறாமல் வைத்திருப்பது என்று சிந்திக்கிறீர்கள்.

பிரபாகரனிசத்தை முன்வைத்து கட்சி தொடங்கிய நீங்கள் இப்போது சீமானிசத்தில் கொண்டு போய் கட்சியை நிறுத்தியிருக்கிறீர்கள்.

ஒன்று சொல்லட்டுமா அண்ணே, எங்கள் தலைவர் தளபதி விஜய் தன் ரசிகர்களை அரசியல் கட்சியின் தொண்டர்களாக உருமாற்றம், செய்து வருகிறார். நீங்கள் உங்கள் கட்சியின் தொண்டர்களை உங்கள் ரசிகர்களாக உருமாற்றம் செய்து வருகிறீர்கள். உங்களோடு என்றும் எங்களுக்கு ஒத்து போகாது அண்ணே....' எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Prashant Kishor: அப்பாவின் ஆசை; ஐ.நா சபை பணி; மோடி அலை; விஜய்யுடன் மீட்டிங் - பி.கே கடந்து வந்த பாதை

2014 - ஒரு முன்னுரை2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பிரசாரம் பரபரப்பாக நடந்துகொண்டிருந்த நேரம் அது. நான் 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். `இந்தியாவுலயே நம்பர் 1 மாநிலமா குஜராத்தை மாத்தியிர... மேலும் பார்க்க

பஞ்சமி நிலம்: ஓபிஎஸ் நிலப்பட்டா ரத்து... எஸ்சி, எஸ்டி ஆணையம் வழங்கிய அதிரடி உத்தரவு என்ன?

தேனியில் பஞ்சமி நிலத்தை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வாங்கியதாக கூறி, அந்நிலத்திற்கான பட்டாவை ரத்து செய்யுமாறு சென்னை எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 1991ம... மேலும் பார்க்க

`அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை!' - சாடும் ஓபிஎஸ்

'மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் வித்திடப்பட்ட அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை' என்று எடப்பாடியை சாடி ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெ... மேலும் பார்க்க

`சமண சமயத்தினருக்கு சொந்தமான திருப்பரங்குன்றம்’ - உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் புதிய மனு

திருப்பரங்குன்றம் விவகாரம்கடந்த சில நாள்களாக திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்ஹாவில் வழிபடுவது குறித்து இரண்டு மதங்களைச் சேர்ந்த அமைப்பினர் பல்வேறு கருத்துகளை தெரிவித்தும் போராட்டமும் நடத்தி வருகிறார்... மேலும் பார்க்க

Vijay: `பணக்கொழுப்பு; தனிப்பட்ட விருப்பம்'- விஜய் - PK சந்திப்புக்கு அரசியல் கட்சிகளின் ரியாக்சன்

தவெக தலைவர் விஜய்யும் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோரும் சமீபத்தில் சந்தித்து முக்கியமான ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். பிரஷாந்த் கிஷோர் விஜய்யின் கட்சிக்காக வியூகங்களை வகுத்துக் கொடுக்கவிருப்... மேலும் பார்க்க

செங்கோட்டையன் : `பொதுச்செயலாளர் பெயரை களங்கப்படுத்த திமுக திட்டமிட்டு செயல்படுகிறது' - செல்லூர் ராஜூ

அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கியதற்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோவை மாவட்டத்தில் விவசாய சங்கத்தினர் நடத்திய பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கவில்லை... மேலும் பார்க்க