செய்திகள் :

TVK மதுரை மாநாடு: ”தமிழகத்தில் தாமரை மலரப்போகிறது; அதை தம்பி விஜய் பார்ப்பார்" - தமிழிசை காட்டம்

post image

நெல்லை​யில் இன்று நடை​பெறும் பா.ஜ.க பூத் கமிட்டி மண்டல மாநாட்​டில் மத்திய உள்​துறை அமைச்​சர் அமித்ஷா பங்​கேற்​றுப் பேசுகிறார். இதில் பங்கேற்பதற்காக பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்  சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வருகை தந்தார்.

அப்போது அங்கு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “மிஸ்டர் பீeம் என்று நடிகர் விஜய் கூறுவதை மக்கள் ரசிக்க மாட்டார்கள். எம்.ஜி.ஆரை ஒப்பிட்டு இவர் பேசுகிறார்.

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

புதிய வரவு நம்மை ஒன்றும் செய்யாது. பா.ஜ.க பலம் பொருந்திய கட்சியாக வந்து கொண்டிருக்கிறது. வாக்குகளை அதிகப்படுத்தி வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவிற்கும் எங்களுக்கும்தான் போட்டி.  தாமரை இலையில் தண்ணீர் ஒட்ட வேண்டாம். தாமரை தண்ணீரில் வளரப்போகிறது, மலர போகிறது. அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு பா.ஜ.க வளரப்போகிறது. இதனைத் தம்பி விஜய் பார்ப்பார். தமிழக முதல்வர் தன்னை அப்பா என்று கூப்பிடச் சொல்கிறார்.

விஜய் அங்கிள் என்று  குறிப்பிடுகிறார். விஜய்க்கு வசனம் எழுதிக் கொடுத்தவர் அவ்வாறு எழுதிக் கொடுத்துவிட்டார் போல. அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி பொருந்தாதது என்று விஜய் கூறுகிறார். அவருக்கு என்ன அரசியல் தெரியும்?  அரசியல் ஞானம் இருக்கின்றதா? கச்சத்தீவு மீட்பு பற்றிப் பேசுகிறார். இதிலிருந்து அவருக்கு அரசியல் ஞானம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.  பிரதமர் என்ன செய்தார் என்று கேட்கின்றார்.

தமிழிசை

சினிமா வளர்ச்சி கண்டுள்ளது இதற்கு பிரதமர் மோடிதான் காரணம். நடிகர் விஜய் தனி விமானத்தில் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றார். அந்த அளவிற்கு விமான நிலையம் முன்னேறி இருக்கிறது. நாடு முன்னேறி இருக்கிறது.

தூத்துக்குடி விமான நிலையத்தை எந்த வித பிரச்னைகளும் இல்லாமல் கட்டி முடிக்கப்பட்டது.  ஆனால் விஜய்யால் ஒரு மாநாட்டை ஒழுங்காக நடத்த முடிந்ததா? ஒரு கொடியை ஒழுங்காக நட்ட முடிந்ததா? ஆகவே இவர் சொல்வதைப் பொருட்படுத்தத் தேவையில்லை.

இரு மொழிக்கொள்கை வேண்டாம் என்று சொல்லவில்லை. அனைவரும்  அதில்தான் படித்துக் கொண்டு வந்தோம். நாடு விரிவடையும் போது தேசம் விரிவடையும்போது உலக அரங்கில் நாடு முன்னேறும் போது மூன்று மொழி தேவைப்படுகிறது. கர்நாடகா முதல்வர் சித்தாராமையாவிற்கு மூன்று மொழிகளில் ட்வீட் செய்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.  தனியார்ப் பள்ளியில் இரண்டு மொழிதான் சொல்லிக் கொடுக்கிறீர்களா? என்று வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும்.

தமிழிசை

தி.மு.க கட்சிக்காரர்கள் நடத்தும் பள்ளிகளில் மூன்று மொழிகள் உள்ளன. மூன்று மொழி படித்தால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழகம் வளர்ந்து இருக்கிறது. அதில் அனைவரின் பங்கு இருக்கிறது. தி.மு.க, காங்கிரஸ் ஆட்சி செய்த போது இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். தமிழைப் பற்றிப் பேசும் உங்களுக்குத் தகுதி உள்ளதா? தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தீர்கள். அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள்” என்றார். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

TVK: 'தனி ஆள் இல்ல கடல் நான்'- மதுரை மாநாட்டில் மக்களுடன் எடுத்த செல்ஃபியை பகிர்ந்த விஜய்

தமிழக அரசியலில் புதிய கட்சியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில்... மேலும் பார்க்க

`காது, கழுத்தில் நகையுடன் வந்தால் எப்படி தருவாங்க!'- கேட்ட அமைச்சர்... எழுந்த சிரிப்பலை!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியானது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.... மேலும் பார்க்க

TVK மதுரை மாநாடு: "அதிமுக தொண்டர்கள் மனவேதனையில் உள்ளனரா?" - விஜய்க்கு ஆர்.பி.உதயகுமார் பதில்

தமிழக அரசியலில் புதிய கட்சியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில்... மேலும் பார்க்க

புதுச்சேரி: `அபகரிப்பு’ புகாரில் திமுக அவைத்தலைவர் சிவக்குமார்; களமிறங்கிய கவர்னர்; பின்னணி என்ன?

புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் வீடுகளையும், சொத்துக்களையும், ரௌடிகள் மற்றும் போலிப் பத்திரங்கள் மூலம் அபகரிப்பது தொடர் கதையாகி வருகிறது. அபகரிப்பில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் அரசியல... மேலும் பார்க்க

கேரளா: நடிகை உள்ளிட்டோர் பாலியல் புகார்; பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்எல்ஏ; பின்னணி என்ன?

கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ராகுல் மாங்கூட்டத்தில். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாலக்காடு சட்டசபைத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த ஷாபி பறம்பில் போட்டியிட்டு எம்.பி-ஆனார். அதைத்தொடர்ந்... மேலும் பார்க்க

நெல்லை: அமித் ஷா வருகை; ஆதரவு, எதிர்ப்பு, பரபரப்பு... நயினார் நாகேந்திரன் வீட்டில் தேநீர் விருந்து

நெல்லைக்கு வருகை தரும் மத்திய அமைச்சர் அமித் ஷாவை வரவேற்க பாரதிய ஜனதா மற்றும் அ.தி.மு.க-வினர் தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் தி.மு.க சார்பாக நகரம் முழுவதும் எதிர்ப்பு போஸ்டர்கள் ஒட்டப்... மேலும் பார்க்க