செய்திகள் :

UPSC: யுபிஎஸ்சிக்கு புதிய தலைவர் நியமனம்! - யார் இந்த அஜய் குமார்?

post image

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத் (யுபிஎஸ்சி) தலைவராக மத்திய பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் அஜய் குமார் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். 

பிரீத்தி சுதன்
பிரீத்தி சுதன்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத் (யுபிஎஸ்சி) தலைவராக 2024 ஜூலை மாதம் பிரீத்தி சுதன் நியமிக்கப்பட்டார். இவரின் பதவிக்காலம் ஏப்ரல் 29ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது யுபிஎஸ்சி புதிய தலைவராக பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் அஜய் குமார் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.  அவரது நியமனத்திற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் வழங்கி இருக்கிறார். 

யார் இந்த அஜய் குமார்? 

கேரளாவைச் சேர்ந்த அஜய் குமார் ஐஐடி கான்பூரில் படித்தவர். வர்த்தக மேலாண்மை பிரிவில் பி.ஹெச்டி முடித்துள்ளார். 1983ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ஜ் அதிகாரியான இவர், கேரளா மாநிலத்தில் ஐடி மற்றும் மாநில மின்னணு மேம்பாட்டு கழகம் உள்ளிட்ட துறைகளின் செயலாளராகவும் பணியாற்றி இருக்கிறார். 

அஜய் குமார்
அஜய் குமார்

2019 ஆகஸ்ட் முதல் 2022 அக்டோபர் மாதம் வரை பாதுகாப்புத்துறை செயலாளராகப் பணியாற்றி இருக்கிறார். அது மட்டுமின்றி பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பல்வேறு டிஜிட்டல் இந்தியா திட்டங்களில் முக்கியமான பங்கு வகித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

UPSC / TNPSC குரூப் தேர்வுகளில் வெல்வது எப்படி? நாமக்கல்லில் இலவசப் பயிற்சி முகாம் - அனுமதி இலவசம்

'UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து நாமக்கலில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.'UP... மேலும் பார்க்க

UPSC / TNPSC: 'முதல் அடி எடுத்து வைப்பது தான் சிரமம்' - சிறப்புரை ஆற்றிய சசி மோகன் ஐபிஎஸ்

ஆனந்த விகடன் மற்றும் கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து UPSC/TNPSC -குரூப் 1,2 தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இலவச பயிற்சி முகாம் , கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் ... மேலும் பார்க்க

UPSC / TNPSC: 'இந்த முறையைத் தொடர்ந்து பின்பற்றினால் வெற்றி நிச்சயம்'- சிவகுரு பிரபாகரன் ஐ.ஏ.எஸ்

UPSC/ TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடன் மற்றும் கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகடாமி இணைந்து கோவையில் ஓர் இலவசப் பயிற்சி முகாம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.... மேலும் பார்க்க

UPSC / TNPSC குரூப் தேர்வுகளில் வெல்வது எப்படி? கோவையில் இலவசப் பயிற்சி முகாம் - அனுமதி இலவசம்

'UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து கோவையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.'UPSC... மேலும் பார்க்க

UPSC: வெளியான தேர்வு முடிவுகள்; இந்திய அளவியல் முதலிடம் பிடித்த சக்தி துபே - யார் இவர்?

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கிறது. 1009 பேர் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இதில் 335 பேர் பொதுப் பிரிவினர். 109 பேர் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினர் ஆவர். யுப... மேலும் பார்க்க