செய்திகள் :

Vaiko: 'துரை வைகோவும் மல்லை சத்யாவும் ஒன்றா? என்றார்; ஆயிரம்தான் இருந்தாலும்..!’ - மல்லை சத்யா வேதனை

post image

கடந்த சில மாதங்களுக்கு முன்  துரை வைகோவுக்கும், மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மூத்த தலைவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில் மீண்டும் மதிமுகவில் பிளவு ஏற்பட்டிருக்கிறது. தற்போது வைகோவுக்கும், மல்லை சத்யாவிற்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் விகடனுக்கு மல்லை சத்யா பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.  

வைகோ - மல்லை சத்யா
வைகோ - மல்லை சத்யா

அதில் எங்கிருந்து பிரச்னை ஆரம்பமானது என்பது குறித்து பேசியிருக்கிறார். 

நெறியாளர், ``முதல்முறையாக துரை வைகோ அரசியலுக்கு வரும்போது, நீங்கள் உங்களுடைய துணைப் பொதுச் செயலாளர் பதவியை விட்டுத் தருகிறேன் என்று சொன்னபோது, `இது வந்து எஸ்.சி அடிப்படையில கொடுக்கப்பட்ட பதவி. அது எப்படி துரை வைகோவுக்கு கொடுக்க முடியும்?’ என வைகோ பேசியதாக வல்லம் பஷீர் அவர்கள் ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார் வைகோ அப்படி பேசினாரா?” எனக் கேள்வி எழுப்பினார்.

``ஆம் இது நடந்தது தான். துரை வைகோ அரசியலுக்கு வரும்போது அவருக்கு என்ன பொறுப்பு கொடுக்கலாம் என்ற விவாதம் எழுந்த போது  என்னுடைய துணைப்பொதுசெயலாளர் பதவியைக்  கூட கொடுங்கள் என்று நான் வெள்ளந்தியாக சொல்லிவிட்டேன்.

அதன்பிறகு நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டேன். `இவர் எப்படி அப்படி பேச முடியும்? இவர் வகித்த பொறுப்பை எப்படி துரை வைகோ வகிக்க முடியும். துரை வைகோவும் மல்லை சத்யாவும் ஒன்றா?. இவருக்கு அந்த பதவி வேண்டாம் என்றால், அந்த பதவிக்கு `இன்னார்’ தான் வர முடியும் என்று இருக்கிறது. அப்போது தான் நான் உணர்ந்தேன், இதில் இவ்வளவு சூட்சமம் இருக்கிறது என்று. இதனை தலைவரே சொன்னார். பல பேர் அதுக்காக என்னிடம் வருத்தப்பட்டார்கள். ’

அதன் பிறகு துரை வைகோ  பற்றி யார் கேட்டாலும் நான் பேசமாட்டேன்.  கடந்த நான்கு ஆண்டுகளுக்கான இறுக்கம் அங்கிருந்துதான் தொடங்கியது. எப்போது நான் வலியை சுமந்தனோ அப்போதே நான் இறுக்கம் ஆகிவிட்டேன். நாம் நினைத்த இயக்கம் இது இல்லை. நம்ம நினைச்ச தலைவர் இவர் இல்லை என்ற உணர்வு எனக்குள் இருந்தது.

மல்லை சத்யா
மல்லை சத்யா

ஆனால் அந்த தலைவன் எனக்கு கொடுத்த அரசியல் பயணத்திற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.  அதனை நான் கடந்துவந்துவிட்டேன்.  ஆனால் அதுவே இப்போது இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டதுபோல் ஒரு உணர்வு இருக்கிறது. இன்னும் என்னை நீக்காததால் துணைப் பொதுச்செயலாளர் பதவியில்தான் இருக்கிறேன். ஆனால் அந்தப் பொறுப்பை நான் எங்கும் குறிப்பிட விரும்பவில்லை” என்றார்.

``இத்தனை காலமாக அரசியலில் இயங்கிய வைகோ திடீரென சாதி ரீதியாக செயல்படுவதாக நீங்கள் நினைக்கிறீர்கள்.. அதற்கு என்ன காரணம் இருக்கலாம்?”

``ஆயிரம் தான் இருந்தாலும் அவர்கள் செல்வமும் செல்வாக்கும் பெற்ற ஒரு செல்வந்தர் குடும்பம் . ஒரு பெரிய பண்ணை அல்லது ஜமீன் குடும்பம். பெரிய பாரம்பரியம் கொண்டது. அப்படிபட்டவர் ஒரு கட்சியை உருவாக்குகிறார். அப்படி இருக்கையில் அவர் பிள்ளைக்கு நான் எப்படி பொறுப்பு கொடுக்க முடியும்? என்கிற சிந்தனை வந்திருக்கலாம். நான் தான் அதை சொல்லி இருக்க கூடாது. `நான் தானே உனக்கு பதவி கொடுத்தேன் நீ என் பிள்ளைக்கு பதவி குடுப்பியா? அது என்ன திமிருத்தனமான வார்த்தை?’ என அவர் மனதில் வந்திருக்கலாம். அப்படி காயம்பட்ட பின்னர் அதிலிருந்து நான் என் பார்வையை குறைத்துவிட்டேன். துரை வைகோ குறித்து எங்கும் நான் பேசுவதில்லை” என்றார்.

முழுமையான பேட்டியை காண...

'விஜய்யின் அம்மா கிறிஸ்தவர்; தனி விமானம் வாங்கிக் கொடுத்ததே பாஜக-தான்!'- வெடிக்கும் அப்பாவு

'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். திருநெல்வேலியில் இதுசம்பந்தமான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சபாநாயகர் அப்பாவு, பத்திரிகையாளர்களை சந்திக்கையில் விஜய்யை கடுமையாக... மேலும் பார்க்க

`மக்களை ஏமாற்றுவதில் கின்னஸ் சாதனை; அதன் தொடர்ச்சியே `உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்'- ஆர்.பி.உதயகுமார்

"மக்களைத் தேடி அரசு என்று சொல்கிறீர்கள், இந்த நான்காண்டுகளில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.ஆர்.பி. உதயகுமார்இது குறித்து அவர் வெளியிட்... மேலும் பார்க்க

'திமுக கொடி கட்டிய கார்; ஆட்டோவில் ஆயுதங்கள்' - உயிருக்கு ஆபத்து என ஆதவ் அர்ஜூனா புகார்

தவெகவின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவருடைய வழக்கறிஞர் மோகன் தியாகராய நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.ஆதவ் அர்ஜூனாஅந்தப்... மேலும் பார்க்க

`திமுக கூட்டணியில் பெரிய பூகம்பம் நிகழ்ந்துள்ளது; விரைவில் உடையும்!’ - சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி

விருதுநகரில் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை ... மேலும் பார்க்க

"கீழடியில் ஒன்றும் கிடைக்கவில்லை என்றவர் மூலம் ஆய்வறிக்கை தயாரிப்பா?" - சு.வெங்கடேசன்

"கீழடியில் பெயரளவில் ஆய்வு மேற்கொண்ட ஶ்ரீராமனை அழைத்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பது ஒன்றிய அரசின் திட்டமிட்ட செயல்..." என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.... மேலும் பார்க்க