செய்திகள் :

Vikram Sugumaran: `மதயானைக்கூட்டம்' பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமானார்

post image

இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தியிருக்கிறார். 'மதயானைக்கூட்டம்', 'இராவணக்கோட்டம்' ஆகிய படங்களை இயக்கிய விக்ரம் சுகுமாரனின் மறைவு பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் விக்ரம் சுகுமாரன். 2013-ம் ஆண்டு 'மதயானைக்கூட்டம்' திரைப்படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Vikram Sugumaran with Shanthanu
Vikram Sugumaran with Shanthanu

இதைத் தொடர்ந்து, சாந்தனுவை கதாநாயகனாக வைத்து 2023-ம் ஆண்டு 'இராவணக்கோட்டம்' படத்தை இயக்கியிருந்தார் விக்ரம்.

இதைத் தாண்டி, வெற்றிமாறனின் 'ஆடுகளம்' திரைப்படத்தில் வசனகர்த்தாவாகவும் இவர் பணியாற்றியிருக்கிறார்.

கடந்த 2017-ம் ஆண்டு, சசிகுமாருடன் 'கொடிவீரன்' படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விக்ரம் சுகுமாரன்.

விக்ரம் சுகுமாரன் உயிரிழந்த தகவலைப் பகிர்ந்து, தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஷாந்தனு பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், "உங்களிடமிருந்து பலவற்றைக் கற்றிருக்கிறேன்.

அந்தத் தருணங்களெல்லாம் என்றும் என் நினைவில் இருக்கும். சீக்கிரமாக எங்களை விட்டுப் பிரிந்துவிட்டீர்கள்," எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார். இவருடைய மறைவுக்குத் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Subramaniyapuram: 'சுப்ரமணியபுரம்' பட புகழ் மொக்கைச்சாமி என்கிற இலைக்கடை முருகன் காலமானார்!

சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான 'சுப்ரமணியபுரம்' திரைப்படம் கல்ட் திரைப்படமாக இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆனப் பிறகும் இன்றும் அத்திரைப்படத்தை டீகோ... மேலும் பார்க்க

Thug Life: 'மணி சார், கமல் சாருடன் பணியாற்றுவது என்னுடைய கனவு'- அசோக் செல்வன் நெகிழ்ச்சி

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'தக் லைஃப்' இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திர... மேலும் பார்க்க

Paradhu Po: 'All Appas Are Liars' - வெளியான இயக்குநர் ராமின் 'பறந்து போ' படத்தின் டீசர்

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கிற 'பறந்து போ' திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, அஜு வர்கீஸ் ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள... மேலும் பார்க்க

Benz: லோகேஷ் கனகராஜின் LCU-வில் Walter ஆக இணைந்த நிவின் பாலி - வெளியான மிரட்டல் அப்டேட்

‘ரெமோ’, ‘சுல்தான்’ ஆகியப் படங்களைக் கொடுத்த இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் ‘பென்ஸ்’. லோகேஷ் கனகராஜின் கதையை பாக்கியராஜ் கண்ணன் படமாக்குகிறார். லோகேஷும் உடன் இணைந்து ... மேலும் பார்க்க

Thug Life : 'தமிழ் சினிமாவில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கப்போகிறது!' - நாசர்

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'தக் லைஃப்'இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திரு... மேலும் பார்க்க