Vikrant Massey: "நான் சினிமாவிலிருந்து ஓய்வு பெறவில்லை..." - விளக்கம் அளித்த 12th Fail நடிகர்
'12th fail' படத்தின் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தவர் பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி.
2016-ம் ஆண்டு வெளியான 'A Death in the Gunj' எனும் திரில்லர் திரைப்படத்தில், தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவர் 'Chhapaak', 'Ramprasad Ki Tehrvi', 'Haseen Dillruba', 'Gaslight' போன்ற படங்களில் நடித்தார். மேலும், விக்ராந்த் மாஸ்ஸி செக்டர் 36, சபர்மதி எக்ஸ்பிரஸ் எனத் தன் சிறப்பான நடிப்பின் மூலம் தொடர்ந்து வெற்றி நாயகனாக தன் சினிமா பயணத்தைத் தொடர்ந்தார்.
தற்போது 'Yaar Jigri', 'Aankhon Ki Gustaakhiyan' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது 37வது வயதில், நடிப்பிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இவர் ஓய்வு அறிவித்தத்தைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில், " எனக்கு தெரிந்தது எல்லாமே திரைப்படங்களில் நடிப்பது மட்டும்தான். அந்த நடிப்புத் தொழில்தான் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது.
ஆனால், என்னுடைய உடல் நலமும் மனநலமும் இப்போது பாதிக்கப்பட்டிருக்கிறது. எனக்கு இளைப்பாற கொஞ்சம் அவகாசம் தேவை. மாற்றமே இல்லாமல் ஒரே மாதிரியாக இருப்பதாக உணர்கிறேன். நான் வெளியிட்ட அறிக்கை தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. நான் சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவதாக புரிந்துகொண்டார்கள்.
ஆனால், நான் அப்படி சொல்லவில்லை. எனக்கு இளைப்பாற கொஞ்சம் இடைவேளை தேவை. இந்த இடைவேளையில் என்னுடைய குடும்பத்தின் மீது அதிக கவனம் செலுத்தப் போகிறேன். எல்லாம் சரியான பின் சரியான நேரத்தில் மீண்டும் வருவேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...