செய்திகள் :

What to watch on Theatre and OTT: பயாஸ்கோப், சீசா, Marco - இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

post image

பயாஸ்கோப் (தமிழ்)

பயாஸ்கோப்

சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் சத்தியராஜ், சேரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பயாஸ்கோப்'. சினிமா பற்றி அறிமுகம் இல்லாத கிராமத்தினர் ஒன்று கூடி ஒரு சினிமா எடுக்கிறார்கள் என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் நேற்று (ஜன.3) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

சீசா (தமிழ்)

சீசா

குணா சுப்பிரமணியம் இயக்கத்தில் நட்டி, நிஷாந்த் ரூசோ, நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சீசா'. க்ரைம் திரில்லர் திரைப்படமான இது நேற்று (ஜன.3) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

எக்ஸ்ட்ரீம் (தமிழ்)

எக்ஸ்ட்ரீம்

ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் ரச்சிதா மகாலட்சுமி, அபி நட்ஷத்திரா, ஆனந்த் நாக், ராஜ்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'எக்ஸ்ட்ரீம்'. பெண்களின் ஒழுக்கங்கள் பற்றி சமூகம் வைத்திருக்கும் குரூரமானப் பார்வைகளை கேள்வி எழுப்பும் போலீஸ் விசாரணை திரில்லர் திரைப்படமான இது நேற்று (ஜன.3) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Lara (தமிழ்)

Lara

மணி மூர்த்தி இயக்கத்தில் அஷோக் குமார், கார்த்திகேசன், அனுஸ்ரேயா, வர்ஷினி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Lara'. சஸ்பன்ஸ் திரில்லர் திரைப்படமான இது நேற்று (ஜன.3) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

கலன் (தமிழ்)

கலன்

வீர முருகன் இயக்கத்தில் அப்புக் குட்டி, சம்பத் ராம், தீபா ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கலன்'. க்ரைம் திரில்லர் திரைப்படமான இது நேற்று (ஜன.3) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Identity (மலையாளம், தமிழ்)

Identity

அகில் பால் இயக்கத்தில் டொவினோ தாமஸ், த்ரிஷா கிருஷ்ணன், வினய் உள்ளிட்டோ நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Identity'. க்ரைம், திரில்லர் திரைப்படமான இது ஜன.2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Marco (தமிழ், மலையாளம்)

Marco Review

ஹனிஃப் அதேனி இயக்கத்தில் சூரியின் ‘கருடன்’ படத்தில் வில்லனாக நடித்த உன்னி முகுந்தன், யுக்டி, கபீர், சித்திக், அன்சன், ஜெகதீஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Marco’. தங்கக் கடத்தல் வியாபாரத்தை தலைமுறை தலைமுறைகளாகச் செய்து வரும் குடும்பத்திற்கு ஒரு மாஃபியா கும்பல் பிரச்னைகள் கொடுக்கிறது. அந்த மாஃபியா கும்பல் யார், குடும்பத்தில் இருக்கும் ஒருவரா, இல்லை வெளியில் இருப்பவர்களா என்பதைக் கண்டுபிடித்து தங்கக் கடத்தலை தன் வசமாக்கத் துடிக்கிறார் உன்னி முகுந்தன்.

ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது நேற்று (ஜன.2) முதல் தமிழில் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. 

Orumbettavan (மலையாளம்)

Orumbettavan

சுகேஷ் இயக்கத்தில் ஜாஃப்பர் இடுக்கி, இந்திரன்ஸ், ஜானி ஆண்டனி, காஷ்மீரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Orumbettavan'. ஆதரவற்று நிற்கும் சிறுமியைச் சுற்றி நடக்கும் சஸ்பென்ஸ், திரில்லர் திரைப்படமான இது ஜன.2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

A Legend (ஆங்கிலம்)

A Legend

ஸ்டேன்லி டாங் இயக்கத்தில் ஜாக்கி ஜான், ஸாங், குலி, ஆரிஃப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'A Legend'. ஆக்‌ஷன், அட்வன்சர் திரில்லர் திரைப்படமான இது இது ஜன.2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Sonic the Hedgehog 3 (ஆங்கிலம்)

Sonic the Hedgehog 3

ஜெப் ஃபோவ்லர் இயக்கத்தில் பென், கியோனு, கொலீன், ஐட்ரிஸ் உள்ளிட்டோர் பங்களிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Sonic the Hedgehog 3'. ஃபேண்டஸி, அனிமேஷன் திரைப்படமான இது ஜன.2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Kraven: The Hunter (ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி)

Kraven: The Hunter

ஜே.சி.சந்தூர் இயக்கத்தில் ஆரூண், ரஸ்ஸல், ஆரியேனா, பிரெட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Kraven: The Hunter'. சயின்ஸ் பிக்ஸன் ஆக்‌ஷன் அட்வன்சர் திரைப்படமான இது ஜன.3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

இந்த வார ஓடிடி ரிலீஸ்...

Reunion (ஆங்கிலம்)

Reunion

கிறிஸ் நெல்சன் இயக்கத்தில் லில் ரெல் ஹோவெரி, பில்லி, ஜாமியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள நண்பர்களின் சேட்டைகள் நிறைந்த ஜாலியான காமெடி திரைப்படமான இது 'Netflix' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Katha Kamamishu (தெலுங்கு)

Katha Kamamishu

கெளதம், கார்த்திக் இயக்கத்தில் இந்தரஜா, கருணா குமார், கிருத்திகா ராய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Katha Kamamishu'. வெவ்வேறு விதமான காதல் கதைகளைச் சொல்லும் இத்திரைப்படம் 'Aha' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Missing You (ஆங்கிலம்)

Missing You

நிமெர், இஸ்ஸர் இயக்கத்தில் ரோஸ்லிண்ட், ஆஷ்லே, மேரி மெல்லோன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் 'Missing You'. க்ரைம் திரில்லர் சீரிசான இது 'Netflix' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தியேட்டர் டு ஓடிடி

ஜாலியோ ஜிம்கானா (தமிழ்) - Aha

Panchavalsara Padhathi (மலையாளம்) Padhathi manorama MAX - Dec 31

Love Reddy (தெலுங்கு) - Aha

I Am Kathalan (மலையாளம்) - manorama MAX

All We Imagine As Light (மலையாளம்) - Disney + Hotstar

இந்த வாரம் நீங்கள் பார்க்கப் போகும் திரைப்படம் எது என்பதைக் கமெண்டில் தெரிவிக்கவும்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Ajith Kumar: "That’s racing..." - கார் ரேஸ் பயிற்சியின்போது அஜித் குமாருக்கு விபத்து

அஜித் குமார் ரேஸிங் டீம் துபாய்க்குச் சென்றிருக்கிறது.நடிப்பைத் தாண்டி ரேஸிங் களத்திலும் தற்போது அதிக கவனத்தைச் செலுத்தி வருகிறார் அஜித் குமார். புதியதாக `அஜித்குமார் ரேஸிங்' என்ற குழுவையும் கடந்தாண்ட... மேலும் பார்க்க

Sivakarthikeyan:``என்னுடைய தயாரிப்பில் உங்களின் முதல் இந்திப் படம் என அமீர் கான் சொன்னார்" - எஸ்.கே

சிவகார்த்திகேயன் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படம், சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் படம் என வலுவான லைன் அப்களை தனது கையில் வைத்திருக்கிறார்.இதுமட்டுமல்ல `டான்' சிபி சக்ரவர்த்தி இயக்கத்தி... மேலும் பார்க்க

KH 237: அமெரிக்காவில் AI படிப்புடன் ஸ்கிரிப்ட் வொர்க்; ஆரம்பமாகும் அடுத்த அதிரடி

மணிரத்னத்தின் இயக்கத்தில் 'தக் லைஃப்' படத்தில் நடித்து வந்த கமல்ஹாசன், அந்த படத்தை முடித்து கொடுத்து விட்டு, ஒரு சில மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு பறந்தார். கடந்த நவம்பர் மாதத்தோடு 'தக் லைஃப்' படப்பிட... மேலும் பார்க்க

Sivakarthikeyan: ``சாதாரணமான ஒருவன் வளர்ச்சியை எட்டும்போது சிலர்தான் வரவேற்கிறார்கள்!'' - எஸ்.கே!

சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இத்திரைப்படத்தில் எஸ்.கேவுடன் ஜெயம் ரவி, அதர்வா, ஶ்ரீ லீலா எனப் பலரும் நடிக்கிறார்கள். மற்றொரு பக்கம் முருகதாஸ் இயக்கும்... மேலும் பார்க்க

Madraskaaran: "என்ன எப்போதும் செகண்ட் ஹீரோவாகவே தேர்ந்தெடுக்குறாங்க..." - கலையரசன் ஆதங்கம்

எஸ் ஆர் புரொடக்ஷன் சார்பில் B.ஜகதீஸ் தயாரிப்பில், 'ரங்கோலி' பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் '... மேலும் பார்க்க