செய்திகள் :

WI vs AUS: 27 ரன்களில் மொத்த டீமும் ஆல் அவுட்... 15 பந்துகளில் ஸ்டார்க் செய்த உலக சாதனை!

post image

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கும் ஆஸ்திரேலிய அணி, கடந்த ஜூன் 25 முதல் தொடங்கிய 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றியிருக்கிறது.

முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலியா பேட்டிங்கில் தடுமாறினாலும் முழுக்க முழுக்க பந்துவீச்சில் அபாரமாகச் செயல்பட்டு வெற்றிபெற்றது.

இத்தகைய சூழலில்தான், ஜூலை 12-ம் தேதி பகலிரவு போட்டியாக மூன்றாவது போட்டி தொடங்கியது.

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா வழக்கம்போல வெஸ்ட் இண்டீஸின் பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் முதல் இன்னிங்ஸில் 225 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஷமார் ஜோசப் 4 விக்கெட்டுகளும், அல்சாரி ஜோசப் மற்றும் ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

ஷமார் ஜோசப்
ஷமார் ஜோசப்

அதைத்தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் தடுமாற அவர்களை 143 ரன்களுக்குச் சுருட்டியது ஆஸ்திரேலியா.

ஸ்காட் போலண்ட் 3 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

82 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா 121 ரன்களுக்குச் சுருண்டது.

அல்சாரி ஜோசப் 5 விக்கெட்டுகளும், ஷமார் ஜோசப் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் அணியை ஒற்றை ஆளாக முதல் ஓவரிலிருந்தே தகர்த்தார் ஸ்டார்க்.

முதல் ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்திய ஸ்டார்க், தான் அடுத்து வீசிய 9 ஒன்பது பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

வெறும் 7 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலைக்குச் சென்றது வெஸ்ட் சென்றது.

அடுத்து 14-வது ஓவரில் கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்காட் போலண்ட் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த, மீதமிருந்த ஒற்றை விக்கெட்டையும் அடுத்த ஓவரிலேயே எடுத்தார் ஸ்டார்க்.

27 ரன்களில் வெஸ்ட் இண்டீஸ் ஆல் அவுட் ஆனது .

Mitchell Starc - மிட்செல் ஸ்டார்க்
Mitchell Starc - மிட்செல் ஸ்டார்க்

டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 70 ஆண்டுகளில் ஒரு அணி பதிவுசெய்த குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான்.

ஒட்டுமொத்தமாக முதலிடத்தில், 1955-ல் இங்கிலாந்துக்கெதிரான போட்டியில் நியூசிலாந்து அடித்து 26 ரன்கள் இருக்கிறது.

இதுவொருபுறமிருக்க, இப்போட்டியின் மூலம் தனது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் கரியரில் 100-வது போட்டியில் களமிறங்கிய ஸ்டார்க், இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து 7 விக்கெட்டுகளுடன் டெஸ்டில் 400 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லைக் கடந்தார்.

மேலும், இரண்டாவது இன்னிங்ஸில் 15 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் மிகவும் வேகமாக (பந்துகள் அடிப்படையில்) 5 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற உலக சாதனையை ஸ்டார்க் படைத்தார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

இங்கிலாந்தை அதன் மண்ணில் சாய்த்து வரலாறு படைத்த இந்திய வீராங்கனைகள்! சாத்தியமானது எப்படி?

சில சமயம், பார்த்துப் பழகிய ஒருவரின் கையெழுத்து சட்டென மாறியிருப்பதை கவனித்திருக்கிறீர்களா? எழுத்து அதேதான்.ஆனால், அதை எழுதிய வேகத்திலும், வளைவுகளிலும், பேனாவை அழுத்திய விதத்திலும் ஒரு புதிய தீர்மானமு... மேலும் பார்க்க

Rohit - Kohli: ரோஹித், கோலி டெஸ்ட் ஓய்வு விவகாரத்தில் மௌனம் களைத்த பிசிசிஐ; காரணம் என்ன?

இந்தியாவில் ஐபிஎல் நடந்துகொண்டிருந்த சமயத்தில், இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித்துக்குப் பதிலாக புதிய கேப்டன் நியமிக்கப்படப்போகிறார் என்று மே மாதம் பேச்சு உலாவத் தொடங்கிய அடுத்த சில நாள்களில... மேலும் பார்க்க

Jasprit Bumrah: "He looks terrific" - பும்ராவை நேரில் பாராட்டிய இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்தும், இந்தியாவும் தலா ஒரு வெற்றி பெற்று சமனில் இருந்த சூழலில், ஜ... மேலும் பார்க்க

பேராசிரியரின் பாலியல் தொல்லை; கல்லூரியில் தீக்குளிப்பு - 3 நாள் உயிருக்கு போராடிய மாணவி உயிரிழப்பு

ஒடிசாவில் உள்ள பாலசோர் என்ற இடத்தில் இருக்கும் பஹிர் மோகன் கல்லூரியில் பி.எட் படித்து வந்த மாணவிக்கு அதே கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்யும் சமீர் குமார் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூற... மேலும் பார்க்க

IND vs ENG: "கடைசி ஒரு மணி நேரத்தில்..." - தோல்வி குறித்து கில் பேசியதென்ன?

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கடைசி நாளான இன்று வெற்றிக்கு மிக நெருக்கமாக வந்து போட்டியை இழந்திருக்கிறது இந்திய அணி. 22 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில்லான வெற்றியைப் பெற்றிருக்கிறது... மேலும் பார்க்க

ENG vs IND: "ஆர்ச்சரை இதனால்தான் களமிறக்கினேன்" - ஆட்ட நாயகன் ஸ்டோக்ஸ் கூறுவதென்ன?

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து vs இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்று சமனில் இருந்தன.மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ்... மேலும் பார்க்க