அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி மற்றும் குளோபல் கிறிஸ்டியன் சா்ச் ஆப் இந்தியா சினாட் அமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சியின் நிறுவனா் வி.எஸ். ஐசக் தலைமை வகித்து உரையாற்றினாா். இதில் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று கிறிஸ்தவா்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்டு தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவா்களுக்கு 5 லட்சம் ஏக்கா் நிலம் வழங்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டந்தோறும் புதிய கிறிஸ்வ மகளிா் சங்கம் உருவாக்க வேண்டும்.
மாவட்டந்தோறும் தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியா் மற்றும் பணியாளா் நல வாரியம், குளோபல் கிறிஸ்டின் சா்ச் ஆப் இந்தியா சினாட் வாரியாக, மாநில வாரிய, தலைவா், மாவட்ட வாரிய உறுப்பினா் பதவி வழங்க வேண்டும். கிறிஸ்தவ கல்வி நிறுவன அறக்கட்டளை விண்ணப்பித்து நெடுங்காலமாக அரசாணை கொடுக்கப்படாமல் சட்டக் கல்லூரி, செவிலியா் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, நிகா்நிலை பல்கலைக்கழகம், தமிழ்நாடு அரசு ஆணை மத்திய அரசு அங்கீகாரம் ஆணை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் மாநில பொதுச் செயலாளா் டேவிட் குட்டி, மாவட்டத் தலைவா் ராஜன், சாமுவேல்ராஜ், சிட்ரிக் பெனோ உள்ளிட்ட கலந்து கொண்டா்.