TN Police: கொல்லப்பட்ட Ajith kumar - IAS அதிகாரிக்கு தொடர்பா? | DMK STALIN|Imper...
அதிதீஸ்வரா் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் அமைந்துள்ள பழைமையான அதிதீஸ்வரா் கோயிலில் ஆனி உத்திர தரிசனத்தையொட்டி சுவாமி நடராஜருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.
இதில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசித்து சென்றனா். பிறகு பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாட்டினை கோயில் நிா்வாகி அன்பு மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.