செய்திகள் :

`அதிமுக - பாஜக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது; திமுக வீட்டுக்கு போவது உறுதி' - வானதி சீனிவாசன்

post image

பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “முதல்வர் ஸ்டாலின் அவர் நெருக்கடி காலகட்டத்தில் பட்ட கஷ்டங்களை மறந்து விட்டார் போல. திமுக அரசாங்கத்தை எதிர்த்து யார் சமூக வலைதளங்களில் பதிவிட்டாலும் கைது செய்யப்படுகிறார்கள்.

வானதி சீனிவாசன்

இது தனி நபர் உரிமையை மீறும் செயல். அவர்கள் நெருக்கடி  காலத்தில் அனுபவித்த துன்பங்களை எல்லாம், தற்போது மக்களை அனுபவிக்க வைக்கிறார்கள். சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது.

தமிழக மக்களின் மீது தாங்க முடியாத வரி சுமை ஏற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு நபரும் இந்த அரசாங்கத்தால் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  நெருக்கடி காலத்தின் ஒரு பகுதியில் தமிழகம் இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. திமுக ஆரம்பத்தில் இருந்தே கல்வியில் அரசியல் செய்கிறது.

கல்வி

நாங்கள் ஒருபோதும் கல்வியில் அரசியல் செய்யவில்லை. தேசிய கல்விக் கொள்கை மிகவும் முக்கியமானது. தமிழ்நாடு அரசு இதில் முரணான கருத்துகளை கூறுகிறார்கள். மாநில அரசின் தோல்விக்கு மத்திய அரசின் மீது பழி போடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை, சித்தாந்தம் இருக்கிறது. அந்தந்த கட்சிகள் அவரவர் சித்தாந்தத்தில் தெளிவாக இருக்கிறார்கள். அதிமுக - பாஜக கூட்டணி மிகவும் வலுவாக இருக்கிறது. இதை எந்த சக்தியாலும் உடைக்க முடியாது. தமிழகத்தில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.

பாஜக - அதிமுக கூட்டணி

திமுக மீது விடுதலை சிறுத்தைகள் எத்தனை முரண்பாடுகளை வைத்திருக்கிறார்கள். அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. அதுவே அதிமுக - பாஜக என்றால் உடனே விரிசல் என்பார்கள். 2026 தேர்தலில் எங்கள் கூட்டணி  வெற்றி பெறும். திமுக வீட்டுக்கு போவது உறுதி.” என்றார்.

ADMK : Tension ஆன எடப்பாடி - அமைதிப்படுத்திய தங்கமணி? | DMK BJP NTK TRUMP |Imperfect Show 25.6.2025

* போர் வெற்றியைக் கொண்டாடும் இஸ்ரேல், ஈரான், அமெரிக்கா?* காசாவில் மீண்டும் தீவிரத் தாக்குதல்களைத் தொடங்கிய இஸ்ரேல்!* உக்ரைனில் 26 பொதுமக்களைக் கொன்ற ரஷ்யா?* “நியாயம்ன்னு ஒன்னு இருக்குல..” அமெரிக்காவின... மேலும் பார்க்க

உடையும் `DMK-MDMK' கூட்டணி? Duraimurugan-ஐ கட்டம் கட்டும் அறிவாலயம்? | Elangovan Explains

துரைமுருகனின் பொது செயலாளர் பதவியை பறித்துவிட்டு வேறொரு சீனியருக்கு கொடுக்கும் திட்டம் என டாக். இதற்கு அச்சாரமாக, மேலிட மாப்பிள்ளை கேட்ட கேள்வியால், துரைமுருகன் அப்செட் என தகவல். இதனால் இன்னொரு பக்கம்... மேலும் பார்க்க

PMK அருள்: காலையில் மாநில பொறுப்பு அளித்த ராமதாஸ்; மாலையில் மாவட்ட பொறுப்பிலிருந்து நீக்கிய அன்புமணி

பாமக-வில் கடந்த சில மாதங்களாகவே நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் அதிகார மோதல் நிலவிக்கொண்டிருக்கிறது.இதற்கிடையில், ஒரு வாரத்துக்கு முன்பு பா.ம.க சேலம் மாநகர மாவட்டச் செயலாளரும், சேலம் மேற... மேலும் பார்க்க

Iran: ஈரானில் மாயமான 400 கிலோ யுரேனியம்.. ஆபத்தா? - அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வதென்ன?

ஜூன் 13, 2025 அன்று இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கும், ஜூன் 21, 2025 நள்ளிரவில் அமெரிக்கா ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கும் காரணம் ஒன்று தான்!அது, 'ஈரான் அணு ஆயுத தயாரிப்பை நோக்கி நகர்கிறது.... மேலும் பார்க்க

Zohran: நியூ யார்க் மேயர் தேர்தலில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த சொஹ்ரான் மம்தானி! - யார் இவர்?

நியூ யார்க் மேயர் தேர்தலில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த சொஹ்ரான் மம்தானி போட்டியிட தேர்வாகி இருக்கிறார்.நியூ யார்க் மேயர் தேர்தல் வரும் நவம்பர் 4 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. குடியரசுக் கட்சி சார்பில்... மேலும் பார்க்க

பாமக: ``நான் சாகவில்லை, உயிரோடுதான் இருக்கிறேன்'' - அன்புமணி பிராத்தனைக்கு எம்எல்ஏ அருள் பதில்

பா.ம.க சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் பா.ம.க கௌரவத் தலைவர் ஜி.கே. மணி ஆகிய இருவரும் உடல் நலக்குறைவால் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனிடையே “அவர்கள் இருவரும் வி... மேலும் பார்க்க