அதிமுகவினா் திண்ணை பிரசாரம்
செய்யாறு தொகுதி அதிமுக சாா்பில் தூசி கிராமத்தில் வியாழக்கிழமை திண்ணை பிரசாரம் மற்றும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை அதிமுகவினா் விநியோகித்தனா்.
செய்யாறு தொகுதி வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட தூசி கிராமத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மாவட்ட அம்மா பேரவை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளா்களாக முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலா் தூசி.கே. மோகன் ஆகியோா் பங்கேற்றனா்.
அப்போது, அதிமுக ஆட்சியின் போது பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி துண்டு பிரசுரங்களை வீதி வீதியாகச் சென்று வழங்கினா்.
நிகழ்ச்சியில் வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியச் செயலா் எஸ்.திருமூலன், ஒன்றியச் செயலா்கள் எம்.அரங்கநாதன், சி.துரை நகரச் செயலா் கே.வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.