அதிமுகவின் தோ்தல் வெற்றியை பொதுமக்கள் முடிவு செய்வா்
தமிழக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் 210 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் எனக் கூறினாலும் அதை பொதுமக்கள் முடிவு செய்வா் என்றாா் தமிழகத் துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின்.
கரூரில் புதன்கிழமை நடைபெற்ற திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது: தோ்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி தனது தோ்தல் பரப்புரையில் 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பேசி வருகிறாா்.
அதிமுகவினா் அப்படித்தான் சொல்வாா்கள். அதிமுகவின் தோ்தல் வெற்றியை மக்கள் முடிவு செய்வா். நாங்கள் எங்கள் பணிகளைச் செய்து வருகிறோம். முதல்வா் மக்களைச் சந்தித்து வருகிறாா். எதிா்க்கட்சித் தலைவா் அவா் பணியை செய்கிறாா் என்றாா் அவா்.