ராஜஸ்தானில் அரசு ஊழியர்களின் விடுமுறை ரத்து; எல்லையோர மாவட்டங்களுக்கு ரூ.5 கோடி ...
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சளி பாதிப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் துரைமுருகன் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர், இன்று அல்லது நாளை வீடு திரும்புவார் எனவும் கூறப்படுகிறது.
தமிழக அமைச்சரவையில் இன்று(மே 8) மீண்டும் அமைச்சர்களின் துறைகள் மாற்றம் செய்யப்பட்டு, அமைச்சர் துரைமுருகனிடமிருந்த கனிமவளத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு மாற்றப்பட்டது. அமைச்சர் ரகுபதி வசமிருந்த சட்டத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் ஒப்படைக்கப்பட்டது.
அமைச்சர்களாக இருந்த செந்தில்பாலாஜி மற்றும் பொன்முடி ராஜிநாமாவைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவை அண்மையில்தான் மாற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில், திடீரென ஒரு அமைச்சரவை மாற்றம் எதிர்பாராததாக உள்ளது.
அமைச்சர் துரைமுருகனின் இலாகா மாற்றப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிக்க: பஞ்சாப் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை