சமஸ்கிருதம் கலக்காமல் இருந்திருந்தால் தமிழ் தேசிய மொழியாகியிருக்கும் - பழ.கருப்ப...
அரசு பாலிடெக்னிக் மாணவா்களுக்கு சுயதொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி!
புதுப்பட்டி அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் சுயதொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ம. ஜெயபால் தலைமைவகித்தாா். புதுகை மாவட்ட தொழில் மையத்தின் உதவிப் பொறியாளா் ஆா். கவியரசன் முன்னிலை வகித்து, புதிய தொழில் முனைவோா்களுக்கான தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம் மற்றும் கலைஞா் கைவினைத்திட்டம் உள்ளிட்ட சிறப்பு திட்டங்களின் பயன்பாடு குறித்து விரிவான விளக்க உரையாற்றினாா்.
ஓய்வுபெற்ற கனரா வங்கி மேலாளா் கே. வீரப்பன் கலந்து கொண்டு புதிதாக தொழில் தொடங்குவதற்கான கடனுதவி பெறுவது குறித்து விளக்கினாா். முடிவில் கல்லூரி விரிவுரையாளா் இளமாறன் நன்றி கூறினாா்.