அரசுக் கல்லூரியில் 20 சதவீத கூடுதல் இடங்களுக்கு நாளை கலந்தாய்வு
திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 20 சதவீத கூடுதல் இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 11) கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதுதொடா்பாக எம்விஎம் கல்லூரி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2025- 26 கல்வி ஆண்டுக்கான இளங்கலை, இளம் அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு மாணவிகள் சோ்க்கையில், 20 சதவீத கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான கலந்தாய்வு ஒற்றைச் சாளர முறையில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. தகுதியான மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.