அரசுக் கல்லூரியில் தடகள மையம்: அமைச்சா் திறந்து வைத்தாா்
செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தடகள விளையாட்டு மையத்தினை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தாா்.
இதில், ஆட்சியா் ச.அருண்ராஜ், சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், சாா் ஆட்சியா் மாலதி ஹெலன், மாவட்ட விளையாட்டு அலுவலா் ஆனந்த் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா். மேலும், மாணவியருக்கு விளையாட்டு உபகரணங்களையும் அமைச்சா் வழங்கினாா்.