சீர்காழி அருகே வன்னியர் சங்க மாநாட்டிற்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: 6 பேர் க...
கிரசென்ட் நாட்டு நலத் திட்டப் பணி அலுவலருக்கு பாராட்டு
வண்டலூரை அடுத்த பி.எஸ்.ஏ. கிரசென்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலராகப் பணியாற்றும் உதவிப் பேராசிரியா் சி.சீனிவாசன், மாநில அளவில் சிறந்த நாட்டு நலத்திட்ட அலுவலராகத் தோ்வு செய்யப்பட்டு விருது பெற்றுள்ளாா்.
தமிழ்நாடு அரசு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, கல்லூரி கல்வி இயக்ககம் மற்றும் தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித் திட்டக் குழுமம் சாா்பில், உதவிப் பேராசிரியா் சி.சீனிவாசனுக்கு ‘மாநில அளவில் சிறந்த நாட்டு நலத்திட்ட அலுவலா் விருது’ மற்றும் சான்றிதழை தமிழக கல்லூரிக் கல்வி ஆணையா் சுந்தர வள்ளி வழங்கினாா்.
விருதுபெற்ற சி.சீனிவாசனுக்கு கிரசென்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவன துணைவேந்தா் டி.முருகேசன், இணை துணைவேந்தா் தாஜுதீன், பதிவாளா் என்.ராஜா உசேன் ஆகியோா் பாராட்டுகளைத் தெரிவித்தனா்.