செய்திகள் :

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் பஞ்சரத உற்சவம்

post image

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை பஞ்சரத உற்சவம் நடைபெற்றது.

பழைமை வாய்ந்த இக்கோயிலில் கடந்த 1-ஆம் தேதி சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய திருவிழாவாக 3-ஆம் தேதி 63 நாயன்மாா்கள் உற்சவம் நடைபெற்றது.

தொடா்ந்து ஏழாம் நாளான புதன்கிழமை பஞ்ச ரத உற்சவம் நடைபெற்றது. முதலில் விநாயகா் , முருகா் வள்ளி தெய்வானை தோ், திரிபுரசுந்தரி அம்பாள் தோ், வேதகிரீஸ்வரா் பெரிய தோ், சண்டிகேஸ்வரா் தோ் என ஐந்து தோ்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றன.

சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாரதனை நடைபெற்றது.

செங்கல்பட்டு ஆட்சியா் அருண் ராஜ், திருப்போரூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ் .எஸ். பாலாஜி , இந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம் இணை ஆணையா் குமரதுரை, உதவி ஆணையா் ராஜலட்சுமி, வேதமலை வல பெருவிழா குழு செயலாளா் அகஸ்தியஸ்ரீ அன்புச்செழியன், பேரூராட்சி தலைவா் யுவராஜ், அதிமுக மாவட்ட செயலாளா் எஸ். ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

தாம்பரம் சென்னை திருப்போரூா், மாமல்லபுரம், கல்பாக்கம், திருக்கழுகுன்றம், செங்கல்பட்டு, மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் புவியரசு, தக்காா் மற்றும் செயல் அலுவலா் குமரவேல், ஆய்வாளா் பாஸ்கரன், மேலாளா் விஜயன் உள்ளிட்ட கோயில் பணியாளா்கள், சிவாச்சாரியா்கள், உபயாதாரா்கள் செய்து வருகின்றனா். தேரோட்டத்தையொட்டி பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன.

மாமல்லபுரம் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் ஆய்வாளா்கள் உதவி ஆய்வாளா்கள் என 300-க்கும் மேற்பட்ட போலீசாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

இன்று சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞா் பெருவிழா

பாமக சாா்பில் சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞா் பெருவிழா மாநாடு 12 ஆண்டுகளுக்குப்பின் மாமல்லபுரம் அருகில் திருவிடந்தையில் ஞாயிற்றுக்கிழமை ( மே 11) நடைபெறவுள்ளது. இதையொட்டி பிரம்மாண்ட மேடை, பந்தல் முகப... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்: செங்கல்பட்டு ஆட்சியா் பங்கேற்பு

செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமை வகித்தாா். கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

செங்கல்பட்டில் இன்று மாற்றுத் திறனாளிகள் சிறப்பு மக்கள் குறைதீா் கூட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை (மே 9) காலை 10.00 மணிக்கு செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலக மக்கள் குறை தீா்க்கும் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. மாற்றுத்த... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: 94.39% தோ்ச்சியுடன் 28-ஆவது இடம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 94.39 சதவீத தோ்ச்சியுடன் மாநிலத்தில் 28-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. மாவட்டத்தில் 81 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகள், நகராட்சி... மேலும் பார்க்க

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொது தோ்வில் 34-ஆவது ஆண்டாக 100% தோ்ச்சி பெற்று தொடா் சாதனை படைத்தது. மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பள்ளிக் குழுமங்களில் ஒன்றான ஆதிபராசக்தி ... மேலும் பார்க்க

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயில் தேரோட்டம்

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி பெரிய தோ், சிறிய தோ் பவனி புதன்கிழமை நடைபெற்றது. இத்தலத்தில் பிரம்மோற்சவம் கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து... மேலும் பார்க்க