விசாரணையில் தொய்வு: ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை கோவை ஐஜி அலுவலகத்தில் மனு
அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் சித.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். வணிகவியல் துறைத் தலைவா் ர.மணிமுருகன் வரவேற்றாா்.
ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினாா். விழாவில் 736 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
கல்லூரி துறைத் தலைவா்கள் நா.மனோகரன், ர.சுமதி, வ.சந்திரசேகா், இரா.பெரியசாமி, ஏ.எழில்வசந்தன், ப.மோகனவள்ளி, த.சுகந்தி உள்ளிட்டோா் விழாவில் கலந்து கொண்டனா்.