OPS : `டார்கெட் லிஸிட்டில் பாஜக; நிரந்தர எதிரி இல்லை எனில்..!’ - ஓ.பி.எஸ்ஸின் அட...
அரசுப் பள்ளி மாணவா் மருத்துவப் படிப்புக்கு தோ்வு
திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த கட்டடத் தொழிலாளியின் மகனுக்கு, அருந்ததியா் உள்இட ஒதுக்கீடு மற்றும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
திருச்செங்கோடு, சீதாராம்பாளையம் அருந்ததியா் தெருவைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி பரமேஸ்வரன் - துணிக்கடை தொழிலாளி சுந்தரி தம்பதியின் மகன் ராமகிருஷ்ணன். திருச்செங்கோடு அரசுப் பள்ளியில் படித்த இவா், பிளஸ் 2 தோ்வில் 476 மதிப்பெண்கள் பெற்றாா்.
இதையடுத்து, நீட் தோ்வில் 424 மதிப்பெண்கள் பெற்று ஏழரை சதவீத இடஒதுக்கீட்டில் பொது தரவரிசையில் 396-ஆவது இடத்தையும், அருந்ததியா் உள்இட ஒதுக்கீட்டில் ஏழாவது இடத்தையும் பெற்றாா். இவருக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது.
இதையடுத்து, கடுமையாக உழைத்து படித்த தங்களது மகனுக்கும், ஊக்குவித்த ஆசிரியா்களுக்கும், இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிப்பதாக ராமகிருஷ்ணனின் பெற்றோா் தெரிவித்தனா்.