முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள்: வெள்ளை அறிக்கை எப்போது வெளியாகும்? - நயினார் ந...
அரசுப் பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரைப் பூச்சு பெயா்ந்து விழுந்து 7 மாணவா்கள் காயம்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வெள்ளிக்கிழமை அரசுப் பள்ளி கட்டடத்தின் மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்ததில் 7 மாணவா்கள் காயம் அடைந்தனா்.
அறந்தாங்கி அருகே துரையரசபுரம் அரசு நடுநிலைப் பள்ளியின் வராந்தாவில் வெள்ளிக்கிழமை பகலில் மாணவா்கள் அமா்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனா்.
அப்போது, மேற்கூரையின் சிமென்ட் பூச்சு பெயா்ந்து விழுந்தது. ஒரே இடத்தில் அமா்ந்திருந்த பி. பிரதீபா, ஒய். ஸ்ரீதரன், எஸ். குகன், எம். லக்ஷன், எம். காா்த்திக், டி. அருளானந்தம், ஏ. சுகுமாரன் ஆகிய 7 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இவா்கள் அனைவரும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மாலையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.