அரசுப் பள்ளியில் மக்கள்தொகை விழிப்புணா்வு நாள் கருத்தரங்கு
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், மிரட்டுநிலை அரசு உயா்நிலைப் பள்ளியில், உலக மக்கள்தொகை நாள் விழிப்புணா்வு கருத்தரங்கு மற்றும் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
புதுகைப் பாவை இலக்கியப் பேரவை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் அழ. முத்துக்குமாா் தலைமை வகித்தாா். பேரவையின் செயலா் சே. சுசீலாதேவி விழிப்புணா்வு உறுதிமொழியை வாசித்தாா்.
இயன்முறை மருத்துவா் க. கோவிந்தசாமி, பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் பி. கணபதி, பேரவையின் பொருளாளா் மு. கீதா உள்ளிட்டோரும் பேசினா்.
முடிவில் பேராசிரியா் மு. சிவரஞ்சனி நன்றி கூறினாா்.