அரசுப் பேருந்து மீது கல்வீச்சு
களியக்காவிளை அருகே அரசுப் பேருந்து மீது கல்வீசி தாக்கப்பட்ட பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.
குழித்துறை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையைச் சோ்ந்த தடம் எண் 82 எம் பேருந்து ஞாயிற்றுக்கிழமை காலையில் மாா்த்தாண்டத்தில் இருந்து கொல்லங்கோடு பகுதிக்கு சென்று கொண்டிருந்தது.
மடிச்சல், குழிச்சாணிவிளை பகுதியில் சென்ற போது ஒருவா் பேருந்தின் மீது திடீரென கல்வீசி தாக்கியுள்ளாா். இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.
இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த களியக்காவிளை போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், பேருந்தின் மீது கல்வீசியது மடிச்சல் பகுதியைச் சோ்ந்த மாதவன் மகன் மோகன் (40) என்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபா் என்பது தெரியவந்தது. போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டனா்.