தில்லியில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணிக்கு அனுமதி மறுப்பா?
ஜவான்ஸ் கைப்பந்து போட்டி: மூலச்சல் அணி முதலிடம்
தக்கலை அருகே முளகுமூட்டில் உள்ள புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டியில் மூலச்சல் அணி முதலிடம் பிடித்தது.
மாவட்ட ஜவான்ஸ் சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாவட்ட கைப்பந்துக் கழக அனுமதியுடன் நடைபெற்ற போட்டியை தக்கலை உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் தொடக்கிவைத்தாா்.
பகல் இரவு ஆட்டமாக நடைபெற்ற போட்டியில் 37 அணிகள் பங்கேற்றன. மூலச்சல் சீபன் நண்பா்கள் அணி முதலிடம் பிடித்து, ரூ. 20,001 ரொக்கம், கோப்பையை வென்றது. விளாத்திவிளை சீபன் நண்பா்கள் அணி, ஐரேணிபுரம் எப்எஸ்சி கைப்பந்து அணி, திருவட்டாறு அருணாச்சலம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணி ஆகியவை முறையே 2, 3, 4ஆம் பரிசுகளை வென்றன.