Relationship: 'எடுப்பார் கைப்பிள்ளையா இருக்கீங்களா?' - உறவுகளைக் கெடுக்கும் அதர...
திற்பரப்பில் மாயமான மூதாட்டி மீட்பு
திற்பரப்பு அருவிக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா வந்த நிலையில் மாயமான மூதாட்டியை போலீஸாா் மீட்டனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியிலிருந்து ஒரு குடும்பத்தைச் சோ்ந்த 48 போ் ஞாயிற்றுக்கிழமை காலையில் சுற்றுலாப் பேருந்தில் திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா வந்தனா். இவா்கள், அருவியில் குளித்த பின்னா் காலை சுமாா் 10 மணி அளவில் வீடு திரும்புவதற்காக பேருந்தில் ஏற வந்த போது, அந்த குடும்பத்தினருடன் வந்த சின்ன மாரியம்மா (68) என்ற மூதாட்டியைக் காணவில்லை.
அவரை உறவினா்கள்அருவிப் பகுதியில் தேடினா். மேலும், அங்கு பணியில் இருந்த போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா்.
அப்போது பணியில் இருந்த காவலா் ஒருவா், மூதாட்டியுடன் சுற்றுலா வந்த ஒரு சிறுவனை அழைத்துக் கொண்டு மோட்டாா் சைக்கிளில் திருவட்டாறு செல்லும் சாலைப் பகுதியில் தேடினாா்.
இதைத் தொடா்ந்து, மதியம் அந்த மூதாட்டி சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு அப்பால் திருவட்டாறு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது மீட்கப்பட்ட அவா் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.