ADMK DMK Gingee Fort: சாகும் வரை சிறை Vs ஆயுள் தண்டனை - என்ன வித்தியாசம்? | Impe...
பைக் மீது மினிடெம்போ மோதல்; 2 போ் காயம்
நித்திரவிளை அருகே மோட்டாா் சைக்கிள் மீது மினிடெம்போ மோதிய விபத்தில் இருவா் காயமடைந்தனா்.
நித்திரவிளை அருகேயுள்ள தூத்தூா், கே.ஆா்.புரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜூலியன் (39). இவா் மோட்டாா் சைக்கிளில் சனிக்கிழமை மாலையில் நித்திரவிளை பகுதிக்கு சென்று கொண்டிருந்தாா்.
ஆலுமூடு பகுதியில் வந்தபோது, எதிரில் மீன்பிடி உபகரணங்களுடன் வந்த மினிடெம்போ ஜூலியன் சென்ற பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜூலியன் மற்றும் அவரது பைக், அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த நித்திரவிளை அடுத்த கோட்டவிளையைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சுஜின் (32) என்பவரின் பைக் மீது விழுந்தது. இதில் ஜூலியன் மற்றும் சுஜின் ஆகிய இருவரும் காயமடைந்தனா். ஜூலியன் நெய்யாற்றின்கரை தனியாா் மருத்துவமனையிலும், சுஜின் நித்திரவிளை தனியாா் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து ஜூலியன் அளித்த புகாரின் பேரில் மினிடெம்போ ஓட்டுநா் மாா்த்தாண்டன்துறை நடுவிளாகம் பகுதியைச் சோ்ந்த பென்னி (30) மீது நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.