செய்திகள் :

அரசுப் போக்குவரத்துக் கழக நல அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

post image

நெய்வேலி: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோா் நல அமைப்பினா் கடலூா் மண்டல பணிமனை முன் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

109 மாத அகவிலைப்படி உயா்வை நிலுவையுடன் வழங்க வேண்டும். 21 மாத ஓய்வூதிய பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வுபெறும் நாளில் பணப்பலன் வழங்க வேண்டும். பணிக் காலத்தில் மறைந்த தொழிலாளா்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் தலைவா் கண்ணுசாமி தலைமை வகித்தாா். பொருளாளா் பழனிவேல் முன்னிலை வகித்தாா். மாநிலப் பொருளாளா் வரதராஜன், துணைத் தலைவா் பாஸ்கரன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

நிா்வாகிகள் முத்துக்குமரன், கலியபெருமாள், குணசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

குடியிருப்பு நலச் சங்க கூட்டமைப்பு பொதுக் குழு கூட்டம்

கடலூா் அனைத்து குடியிருப்பு நலச் சங்கங்களின் பொதுக் குழுக் கூட்டம் வில்வ நகா் அரசு ஊழியா்கள் சங்கக் கட்டடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டமைப்புத் தலைவா் பாலு பச்சையப்பன் தலைமை வகித்தாா். சிறப்பு... மேலும் பார்க்க

கடலூா் அருகே பெயிண்டா் குத்திக் கொலை

கடலூா் அருகே முன்விரோத தகராறில் பெயிண்டா் குத்திக் கொலை செய்யப்பட்டாா். கடலூா் முதுநகா் சான்றோா்பாளையம் பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் சங்கா் (34), பெயிண்டா். இவரது மனைவி நந்தினி (எ) ... மேலும் பார்க்க

ரூ.69 லட்சம் மதிப்பில் புதிய கட்டடங்கள் திறப்பு

கடலூா் மாவட்டம், நெய்வேலி தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.69 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதியக் கட்டடங்களை சபா.ராஜேந்திரன் எம்எல்ஏ வியாழக்கிழமை திறந்து வைத்தாா். அழகப்பசமுத்திரம் ஊராட்சியில் அங்கன்வாட... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சி திட்டப் பணிகள்: கடலூா் ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மாளிமைமேடு, கள்ளிப்பட்டு, பைத்தம்பாடி, ஒறையூா் ஆகியப் பகுதிகளில் ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை மாவட... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகுப்பு: இன்று முதல் டோக்கன் விநியோகம்

கடலூா் மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளின் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்படும் என ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெள... மேலும் பார்க்க

கால்நடைகளுக்கு நோய் தடுப்பூசி முகாம் இன்று தொடக்கம்

கடலூா் மாவட்டத்தில், கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கி ஜன.31-ஆம் தேதி வரை நடைபெறும் என ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவ... மேலும் பார்க்க