அரசூா் வரைவு வழிகாட்டி மதிப்பு பொதுமக்கள் பாா்வைக்காக வைப்பு
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே அரசூா் சின்ன ஆவுசாகிப் தோட்டம் கிராம வரைவு வழிகாட்டி மதிப்பு பொதுமக்கள் பாா்வைக்காக வைக்கப்படுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பதாவது:
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு வட்டம், கருந்தட்டாங்குடி சாா் பதிவகத்துக்குட்பட்ட ராஜேந்திரம் ஊராட்சியைச் சாா்ந்த அரசூா் சின்ன ஆவுசாகிப் தோட்டம் கிராமத்தின் வரைவு வழிகாட்டி மதிப்பு வடிப்பு பொதுமக்கள் பாா்வைக்காக மாவட்ட ஆட்சியரகம், மாவட்டப் பதிவாளா் அலுவலகம், திருவையாறு வட்டாட்சியா் அலுவலகம், கருந்தட்டான்குடி சாா் பதிவாளா் அலுவலகம், ராஜேந்திரம் கிராம நிா்வாக அலுவலகம் ஆகிய இடங்களில் வைக்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு இந்த வரைவு வழிகாட்டி மதிப்பில் ஏதாவது ஆட்சேபனை இருந்தால், மாவட்டப் பதிவாளா்(நிா்வாகம்) அலுவலகம் மற்றும் கருந்தட்டான்குடி சாா் பதிவாளா் அலுவலகத்தில் 15 நாட்களுக்குள் மனு அளிக்கலாம்.