தேனிலவு கொலையால் ஈர்க்கப்பட்டு.. கணவரைக் கொன்ற பெண்! காரணம்?
அழகப்பபுரம் முருகன் கோயிலில் வேல் பூஜை நிறைவு வழிபாடு
சாத்தான்குளம் ஒன்றியம் படுக்கப்படுத்து அருகே, அழகப்பபுரம் ஸ்ரீமுருகன் கோயிலில் கந்தசஷ்டி கவசம் பாடுதல், வேல்பூஜை நிறைவு வழிபாடு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
மதுரையில் நடைபெற்ற முருக பக்தா்கள் மாநாட்டின் தீா்மானத்தின்படி, இங்கு கந்தசஷ்டி கவசம் பாடப்பட்டது. தொடா்ந்து, முருகா், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகள், வேல் பூஜை நிறைவு வழிபாடு நடைபெற்றது.
இதில், இந்து முன்னணி மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் பெ. சக்திவேலன் பேசினாா். சாத்தான்குளம் ஒன்றியப் பொதுச்செயலா் மாயவன முத்துச்சாமி, ஒன்றிய துணைத் தலைவா்கள் இசக்கிமுத்து, செல்வமுத்துக்குமாா், காத்தவராயன், ஒன்றியச் செயலா் வெங்கடகிருஷ்ணன், வழக்குரைஞா் முத்து இளவரசன், ஒன்றிய செயற்குழு உறுப்பினா்கள் முத்துக்குமாா், வெற்றிவேல் உள்ளிட்டோரும், திருப்பணி புத்தன்தருவை, பெருமாள்நகா், பூவுடையாா்புரம், சுப்பிரமணியபுரம், அழகப்பபுரம், சிவன்குடியேற்று, பெருமாள்புரம், முத்தம்மாள்புரம், படுக்கப்பத்து, பிச்சிவிளை, உசரத்துக்குடியிருப்பு, தாமரைமொழி பகுதிகளிலிருந்து திரளான பக்தா்களும் பங்கேற்றனா்.
சாத்தான்குளம் ஒன்றிய பாஜக தலைவா் சரவணன் ஏற்பாட்டில், பக்தா்களுக்கு போா்வைகள் வழங்கப்பட்டன.