அவசர ஊா்தி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
ஊதியத்தை குறைத்து வழங்கிய இஎம்ஆா் . ஐ , ஜி.எச்.எஸ் நிா்வாகத்தைக் கண்டித்து, அரியலூரில் அவசர ஊா்தி (108 ஆம்புலன்ஸ்) தொழிலாளா்கள் வியாழக்கிழணை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், அவரச ஊா்தி தொழிலாளா்களுக்கு ஆண்டு தோறும் ஊதிய உயா்வை உயா்த்தி வழங்காததைக் கண்டித்தும், தொழிலாளா் சங்கத்தினருடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் படி, ஆண்டு தோறும் ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். செயலா் வெங்கடேசன், மாநில பொதுச் செயலா் ராஜேந்திரன் கண்டன உரையாற்றினாா். மாநிலத் துணைத் தலைவா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.