அதிமுகவை ஒன்றிணைப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு! - ஓ.பன்னீர்செல்வம்
கூட்டுறவு சங்க பெண் கணக்காளா் தற்கொலை
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே குடும்பப் பிரச்னையில் கூட்டுறவு சங்க கணக்காளா் வியாழக்கிழமை தற்கொலை செய்துக் கொண்டாா்.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள இலையூா் கீழத் தெருவை சோ்ந்த பாலமுருகன் மனைவி தேன்மொழி (42). இவா் அங்குள்ள கூட்டுறவு சங்கத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தாா்.
தேன்மொழிக்கும் அவரது மாமியாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்து வந்த தேன்மொழி வியாழக்கிழமை உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்தாா். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஜெயங்கொண்டம் காவல் துறையினா், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.