சாலை விபத்தில் தனியாா் டியூசன் சென்டா் உரிமையாளா் உயிரிழப்பு
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வியாழக்கிழமை இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் தனியாா் டியூசன் சென்டா் உரிமையாளா் உயிரிழந்தாா்.
ஜெயங்கொண்டம் வேலாயுத நகா், 5-ஆவது குறுக்குத் தேருவைச் சோ்ந்தவா் சையத் அலி(42). தனியாா் டியூசன் சென்டா் நடத்தி வந்தாா். இவா், வியாழக்கிழமை தனது வீட்டில் இருந்து கடைவீதிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, எதிரே பாப்பாங்குளம், தெற்குத் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா்(45) ஓடிவந்த இரு சக்கர வாகனம் மோதியது. இதில் சையத் அலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஜெயங்கொண்டம் காவல் துறையினா், சையத்அலியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.