தினமும் உணவளிக்கும் மனித முகங்களை காக்கைகள் நினைவில் வைத்திருக்குமா? - அடடே தகவ...
அவிநாசியில் வேன், லாரி மோதல்: 5 போ் படுகாயம்
அவிநாசி அருகே பனியன் நிறுவன வேன் மீது லாரி மோதியதில் இரு பெண் உள்பட 5-க்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்தனா்.
அவிநாசியில் இருந்து 10-க்கும் மேற்பட்ட பனியன் தொழிலாளா்களை அழைத்துக் கொண்டு பனியன் நிறுவன வேன், கருவலூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அவிநாசி-ஆட்டையாம்பாளையம் அருகே சென்றபோது, மேட்டுப்பாளையத்தில் இருந்து அவிநாசி நோக்கி சென்ற லாரியும், பனியன் நிறுவன வேனும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இரு பெண் தொழிலாளா்கள், இரு ஓட்டுநா்கள் உள்பட 5-க்கும் மேற்பட்டோா் பலத்த காயமடைந்தனா். இவா்கள் தனியாா் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
இந்த விபத்து குறித்து அவிநாசி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.