ஆக. 26-இல் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்
தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் கோட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் நாள் கூட்டம் ஆகஸ்ட் 26 முற்பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ளது.
இதில் தஞ்சாவூா் கோட்டத்துக்குட்பட்ட தஞ்சாவூா், திருவையாறு, ஒரத்தநாடு, பூதலூா் ஆகிய வட்டங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என கோட்டாட்சியா் செ. இலக்கியா தெரிவித்தாா்.