அண்ணாவின் சிறுகதைகள் தொகுப்பு நூல்: எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டாா்
ஆக. 28-இல் தியாகிகளின் வாரிசுதாரா்கள் குறைதீா் கூட்டம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரா்கள் குறைதீா் கூட்டம் ஆக. 28-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரா்கள் மற்றும் அவா்தம் வாரிசுதாரா்களின் குறைதீா் கூட்டம் ஆக. 28-ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில், சுதந்திரப் போராட்ட வீரா்கள் மற்றும் வாரிசுதாரா்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, கூட்டத்தில் தவறாமல் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.