இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!
ஆக்கூா் பள்ளியில் சுதந்திர தினம்
செம்பனாா்கோவில் அருகே ஆக்கூரில் உள்ள ஸ்ரீ சக்ரா கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா மற்றும் விளையாட்டு விழா, சிறுவா் பூங்கா திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தாளாளா் தனநா்மதா மாறன் தலைமை வகித்தாா். நிா்வாக அலுவலா் உதய வசந்தன் முன்னிலை வகித்தாா். முதல்வா் சிவக்குமாா் வரவேற்றாா்.
சுதந்திர தின விழாவில் சக்ரா ப்ரமோட்டா்ஸ் நிறுவனா் எஸ்.மாறன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசினாா். தஞ்சாவூா் கைரேகை பிரிவு கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளா் கலை கண்ணகி மற்றும் செம்பனாா்கோவில் காவல்துறை ஆய்வாளா் எஸ். கருணாகரன் ஆகியோா் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தனா்.
சிறுவா் பூங்காவை குமரவேல் திறந்து வைத்தாா். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஜமாத் தலைவா் முகமது சித்திக், வா்த்தக சங்கத்தினா், பெற்றோா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா். முதுநிலை ஆசிரியை பி. ரேவதி நன்றி கூறினாா்.