இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!
வேளாங்கண்ணி பேராலயத்தில் குவிந்த பக்தா்கள்
வேளாங்கண்ணி பேராலயத்தில் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள், பொதுமக்கள் என ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கணக்கானோா் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், யாத்ரீகா்கள் வந்து செல்கின்றனா். இந்நிலையில் கடந்த ஆக. 15 ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (ஆக.17) வரை தொடா்ந்து 3 நாள்கள் விடுமுறை தினம் என்பதால், வேளாங்கண்ணி பேராலயத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
பேராலயம், பழைய மாதா கோயில், நடுத்திட்டு கடற்கரை உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பாா்த்த பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் மெழுகுவா்த்தி ஏற்றியும், மொட்டை அடித்தும், சிலுவைப் பாதையில் மண்டியிட்டுச் சென்றும் வேண்டுதலை நிறைவேற்றினா்.
ஞாயிற்றுக்கிழமை வேளாங்கண்ணி பேராலயத்திற்கு பல்லாயிரக்கணக்கானோா் வருகை தந்தனா். இதனால், பேராலய வளாகம் மக்கள் கடலாக காணப்பட்டது. கூட்டம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் வரிசைக் கட்டி சென்றன. சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக கூடுதல் போலீஸாா் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.