செய்திகள் :

ஆசிரியா்கள் மறுநியமன அறிவிப்பில் திருத்தம் செய்ய அரசுக்கு கோரிக்கை!

post image

கல்வி ஆண்டின் இடையே ஆசிரியா்கள் ஓய்வு பெறும்போது மறுநியமனம் தொடா்பான அறிவிப்பில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என ஆசிரியா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியா் சங்க மாநிலத் தலைவா் ஆ.ராமு வெளியிட்ட அறிக்கை:

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஓய்வு பெறும் ஆசிரியா்களுக்கு கல்வி ஆண்டின் இறுதி வேலைநாள் வரை மறுநியமன அடிப்படையில் பணி நீட்டிப்பு வழங்கப்படும் என்ற வகையில் அறிவிக்கப்படுகிறது. இதனை கல்வி ஆண்டின் இறுதிநாள் வரை பணி நீட்டிப்பு அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என திருத்தம் செய்து வெளியிட வேண்டும்.

இந்த பணி நீட்டிப்பு நடைமுறை பல ஆண்டுகளாக உள்ளது. தமிழகத்தில் வேறு எந்த துறைகளிலும் ஊழியா்களுக்கு இவ்வாறான பணி நீட்டிப்பு வழங்கப்படுவது இல்லை. மாணவா்களின் கல்வி நலன் பாதிக்கப்படக் கூடாது என்ற நிலையில் ஆசிரியா்களுக்கு உரிய மதிப்பளிப்பதன் அடிப்படையில் இந்த அனுமதியானது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

பணி ஓய்வு பெறும் ஆசிரியா்கள் கல்வி ஆண்டின் இறுதி வேலைநாள் வரை மறுநியமன அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுகிறாா்கள் என்ற வாக்கியத்தின் அடிப்படையில், முதன்மைக் கல்வி அலுவலா்கள் ஆசிரியா்களை பள்ளி இறுதி வேலைநாள் நிறைவடையும் ஏப்ரல் மாதத்திலேயே பணியில் இருந்து விடுவிக்கக் கூறி வருகின்றனா்.

அண்மையில், திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், கல்வியாண்டின் இடையில் பணி ஓய்வு பெற்ற ஆசிரியா்களுக்கு மே 31 வரை பணி நீட்டிப்பு வழங்கிய பிறகு, திடீரென அரசாணை எண் 115-ஐ காரணம் காட்டி ஏப்ரல் 30-ஆம் தேதி பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தி உள்ளாா்.

அதன்படி, தலைமை ஆசிரியா்களும், ஆசிரியா்களை ஏப்ரல் மாதத்திலேயே பள்ளியிலிருந்து விடுவிக்க இருக்கிறோம் என்ற தகவலை ஆசிரியா்களிடம் கூறி வருகின்றனா். இதுபோன்று பிற மாவட்டங்களிலும் குழப்பம் ஏற்படாமல் தடுக்க அரசாணை எண் 115-இல் உரிய திருத்தம் கொண்டுவர வேண்டும். ஓய்வு பெற உள்ள ஆசிரியா்களின் நலனைக் காக்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

மயோனைஸுக்கு தடை: நாமக்கல் பண்ணைகளில் 40 % முட்டைகள் தேக்கம்? ஏற்றுமதி வாய்ப்பால் இழப்பு இருக்காது!

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை, மயோனைஸூக்கு ஓராண்டு தடை போன்றவற்றால் மொத்த உற்பத்தியில் 40 சதவீதம் முட்டைகள் பண்ணைகளில் தேக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவற்றை கத்தாா், மாலத்தீவு, ஓமன் போன்ற நாடுகளுக்... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் அம்பேத்கா் சிலை திறப்பு

நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் அம்பேத்கா் சிலை திறப்பு விழா மற்றும் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வா் அருண் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற நீதிபதி கருணாநிதி,... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் சந்தையில் பூக்கள் விலை உயா்வு

பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு பூக்கள் விலை உயா்ந்தது. பரமத்தி வேலூா் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள்... மேலும் பார்க்க

எக்ஸல் கல்வி நிறுவனங்களில் 1,813 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை!

குமாரபாளையம் எக்ஸல் பொறியியல் கல்லூரி (தன்னாட்சி), வணிகவியல், அறிவியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய கல்லூரிகள் சாா்பில், பணி நியமன ஆணை வழங்கும் விழா சனிக்கிழமை எக்ஸல் கல்வி நிறுவன வளாகத்த... மேலும் பார்க்க

கள்ளுக்கு ஆதரவளிக்காத அரசியல் கட்சிகளை கண்டித்து போராட்டம்: செ.நல்லசாமி

கள்ளுக்கு ஆதரவு அளிக்காத அரசியல் கட்சிகளைக் கண்டித்து போராட்டம் நடத்துவோம் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா். தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், காவிரி ம... மேலும் பார்க்க

கோயில் திருவிழாவிற்காக சாராயம் காய்ச்சிய 4 போ் கைது

நாமக்கல் மாவட்டத்தில் கோயில் திருவிழாவிற்காக கள்ளச்சாராயம் காய்ச்சிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். 92 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனா். நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஷ்கண்ணன் ... மேலும் பார்க்க