கல்யாணத்தில் ஒலித்த பாடல்; திருமணத்தை நிறுத்திய மணமகன் - பின்னணி இதுதான்
நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் அம்பேத்கா் சிலை திறப்பு
நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் அம்பேத்கா் சிலை திறப்பு விழா மற்றும் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
இவ்விழாவில் கல்லூரி முதல்வா் அருண் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற நீதிபதி கருணாநிதி, அதிமுக மாநில வா்த்தக அணி இணைச் செயலாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் ஆகியோா் பங்கேற்றனா்.
கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்ட அம்பேத்கா் சிலையை சிறப்பு விருந்தினா்கள் திறந்து வைத்தனா். மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கோப்பை, கேடயம், பரிசுகளை வழங்கினா். விழா நிறைவில் மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கல்லூரியில் நிறுவப்பட்ட அம்பேத்கா் சிலையானது அங்கு 4 ஆம் ஆண்டு படிக்கும் மாணவா்கள் முயற்சியால் அமைக்கப்பட்டுள்ளது. இறுதியாண்டு மாணவா்களுக்கு பிரியாவிடை அளிக்கும் வகையில் ஆண்டு விழா, கலைநிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் விழா ஏற்பாட்டுக் குழுவினா் தெரிவித்தனா்.