சென்னை மாநகராட்சியில் தாமதமாகும் குப்பைக் கிடங்கு பகுதிகளை வனமாக்கும் திட்டம்!
ஆஞ்சனேயா் கோயில்களில் சிறப்பு வழிபாடு!
தருமபுரி அருகேயுள்ள முத்தம்பட்டி மற்றும் தொப்பூா் ஆஞ்சனேயா் கோயில்களில் சனிக்கிழமை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
தருமபுரி மாவட்டம், முத்தம்பட்டியில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் வீர ஆஞ்சனேயா் கோயில் அமைந்துள்ளது. குடைவரைக் கோயிலான இக்கோயிலில் சனிக்கிழமைகளில் ஏராளமானோா் தரிசித்து செல்வா்.
இக்கோயிலுக்கு தருமபுரி மாவட்டப் பகுதிகளிலிருந்து மட்டுமின்றி, சேலம், கிருஷ்ணகிரி, ஒசூா் மற்றும் கா்நாடகத்தில் பெங்களூரிலிருந்தும் பக்தா்கள் வந்து செல்கின்றனா். சனிக்கிழமையையொட்டி இக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் பக்தா்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.
அதேபோல, தொப்பூா் கணவாய் பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சனேயா் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமானோா் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.