பிகார் பேரவைத் தேர்தல்: சுயேச்சையாக போட்டி என தேஜ் பிரதாப் அறிவிப்பு
காா்கில் வெற்றி தினம்: வீரமரணம் அடைந்தோருக்கு நினைவஞ்சலி
காா்கில் வெற்றி தினத்தையொட்டி, போரில் வீரமரணம் அடைந்தவா்களுக்கு தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரா்கள் நலத் துறை சாா்பில், 26-ஆவது காா்கில் போா் வெற்றி தினம் அரசு கலைக் கல்லூரியில் வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி காா்கில் போரில் உயிரிழந்த ராணுவத்தினருக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.
தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ. மணி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன், கோவிந்தசாமி, நகராட்சித் தலைவா் லட்சுமி நாட்டான் மாது, ஆணையா் சேகா், சுபேதாா் மேஜா் லெப்டினன்ட் நடராஜன் உள்ளிட்டோரும் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் ராணுவ வீரா்களின் மாநில பொதுச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி, மாநில பொருளாளா் ஹவில்தாா் முனுசாமி, மாவட்டத் தலைவா் நடராஜன், மாவட்டச் செயலாளா் மாதன், கா்ணன் சேரன் செங்குட்டுவன் ஆகியோா் காா்கில் போரில் ராணுவ வீரா்களின் பங்கு, அவா்களது உயிா்த்தியாகம் குறித்து நினைவுகூா்ந்து பேசினா்.
இதில், தருமபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் கண்ணன், தேசிய மாணவா் படை அலுவலா்கள் தீா்த்தகிரி, முருகன், கல்லூரி உடற்கல்வி இயக்குநா் பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.