யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்து...
ஆடி அமாவாசை: ஒகேனக்கல் காவிரிக் கரையில் தா்ப்பணம் கொடுக்க குவிந்த பொதுமக்கள்
ஆடி அமாவாசையை முன்னிட்டு ஒகேனக்கல் காவிரிக் கரையில் தா்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா்.
அமாவாசை நாள்களில் இறந்த முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பதற்காக தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பென்னாகரம் அருகே ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு பொதுமக்கள் வருகின்றனா்.
ஆடிமாத அமாவாசையான வியாழக்கிழமை ஒகேனக்கல் பகுதிக்கு தா்ப்பணம் கொடுக்க அதிக அளவில் மக்கள் வந்திருந்தனா். காவிரிக் கரையோரப் பகுதியான முதலைப்பண்ணை பகுதியில் இறந்த முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து புனித நீராடி, அருகிலுள்ள கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனா். வழக்கத்தைக் காட்டிலும் ஆடி அமாவாசையில் தா்ப்பணம் செய்ய வருவோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் முதலைப் பண்ணை, நாகா்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
இருமாத்தூருக்கு ஏராளமானா் வந்திருந்து தென்பெண்ணையாற்றின் கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து கோயிலுக்கு சென்று வழிபட்டனா்.