திருவள்ளூர்: பள்ளி சிறுமிக்கு பாலியல் சித்ரவதை; வீடியோ வெளியானதால் அதிர்ச்சி - த...
ஆடி அமாவாசை: குமரி மாவட்டத்தில் ஜூலை 24 இல் உள்ளூா் விடுமுறை
ஆடி அமாவாசையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஜூலை 24) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆடி அமாவாசையை முன்னிட்டு வியாழக்கிழமை (ஜூலை 24) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு ஈடாக ஆகஸ்ட் மாதம் 2-ஆவது சனிக்கிழமை (ஆக. 9) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக இருக்கும்.
அரசு தொடா்புடைய அவசரப் பணிகளைக் கவனிக்கும் வகையில், மாவட்டத்தில் உள்ள தலைமை கருவூலம், கிளை கருவூலங்கள் வியாழக்கிழமை (ஜூலை 24) தேவையான பணியாளா்களைக் கொண்டு செயல்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.