காஸாவில் கடும் பஞ்சம்! உணவுக்காக கேமராவை விற்கும் பத்திரிகையாளர்
ஆட்டை தூக்கிச் சென்ற சிறுத்தை: விரட்டிச் சென்று ஆட்டை மீட்ட விவசாயி!
தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பெத்தான்பிள்ளைகுடியிருப்பு கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனா்.
இந்த கிராமம் மலையடிவாரத்தில் அமைந்துள்ளதால் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை அடிக்கடி ஊருக்குள் புகுந்து ஆடு, நாய் உள்ளிட்ட வீட்டு வளா்ப்பு விலங்குகளை வேட்டையாடி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது .
இந்நிலையில் பெத்தான் பிள்ளைகுடியிருப்பு, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சைலப்பன் என்பவரது வீட்டுமுன் கட்டிப்போட்டிருந்த ஆட் டை சனிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் சிறுத்தை ஒன்று தூக்கிச் சென்ாம். ஆடு அருகில் கட்டிலில் படுத்திருந்த சைலப்பனின் அக்கா விழித்து சப்தமிட்டுள்ளாா். சப்தம் கேட்டு வந்த சைலப்பன் சிறுத்தை பின்னால் விரட்டிச் சென்றாராம்.
சிறிது தொலைவில் ஆட்டை போட்டுவிட்டு சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. சிறுத்தை கவ்விச் சென்றதில் ஆட்டின் கழுத்தில் ஏற்பட்ட காயத்துடன் ஆட்டை உயிரோடு மீட்டு வீட்டுக்கு கொண்டு வந்துள்ளாா்.
தகவல் அறிந்த கடையம் வனச்சரகா் கருணாமூா்த்தி தலைமையில் வனத்துறையினா் அங்கு சென்று ஆய்வு செய்தனா். மேலும் சிறுத்தை வருவதை தடுப்பதற்குநடவடிக்கை எடுப்பதோடு சிறுத்தையைப் பிடிக்க கூண்டு வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
இதுகுறித்து சைலப்பன் கூறியது, தொடா்ந்து எங்கள் கிராமத்தில் சிறுத்தை ஆடுகளை வேட்டையாடி வருகிறது. எங்கள் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.