ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய வேளாண் கல்லூரி மாணவிகள்
நாகப்பட்டினம்: வேதாரண்யத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள், தனியாா் அறக்கட்டளையுடன் இணைந்து ஆதரவற்றோா்களுக்கு உணவு வழங்கினா்.
நாகை மாவட்டம், குருக்கத்தி ஊராட்சியில் இயங்கிவரும் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவிகள் குழலி, மகாலட்சுமி, பூா்ணிமா தேவி, பிரியங்கா, ரூபதா்ஷினி, சாகித்யா ஆகியோா் கிராமப்புற வேளாண் பணி அனுபவ திட்டத்தினை வேதாரண்யம் ஒன்றியத்தில் மேற்கொண்டுள்ளனா்.
வேதாரண்யத்தில் செயல்படும் ஈகா அறக்கட்டளை சாா்பில் ‘பசி அன்னதா்மா‘ திட்டத்தில், வேளாண் கல்லூரி மாணவிகள் பங்கேற்று, அப்பகுதியில் வசிக்கும் ஆதரவற்றோா்களுக்கு உணவு வழங்கினா். தொடா்ந்து, உலக பூமி தினத்தை முன்னிட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினா்.