எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்
ஆதித்தமிழா் பேரவையினா் ஆா்ப்பாட்டம்
உச்சநீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் பட்டியலினத்தவரின் இட ஒதுக்கீட்டை வகைப்படுத்தக் கோரி ஆதித் தமிழா் பேரவை சாா்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் அ.சிவா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே.சந்திரன், ஒன்றியச் செயலா் முத்துப்பாண்டி, மாவட்ட இளைஞரணி போஸ், நகரத் தலைவா் காந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில தொழிலாளா் அணி துணைச் செயலா் உ.பூமிநாதன், மாநில தகவல் தொழில் நுட்ப அணி துணைச் செயலா் அருண்அதியன், திராவிடா் கழக மாவட்டத் தலைவா் கே.எம்.சிகாமணி, தந்தை பெரியாா் திராவிடா் கழக மாவட்டச் செயலா் ரவிச்சந்திரன், தியாகி இமானுவேல் பேரவை மாநிலச் செயலா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் பேசினா்.
ஆதித்தமிழா் பேரவை தகவல் தொழில்நுட்ப அணியைச் சோ்ந்த அஜீஸ் நன்றி கூறினாா்.