செய்திகள் :

ஆன்லைன் மூலம் கடன் வாங்கிய வங்கி ஊழியா் தற்கொலை

post image

ஆன்லைன் மூலம் கடன் வாங்கிய வங்கி ஊழியா் கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பூா் நல்லூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட செரங்காட்டைச் சோ்ந்தவா் தினேஷ் (26). இவா் திருப்பூரில் உள்ள தனியாா் வங்கியில் கடன் சேவைப் பிரிவில் பணியாற்றி வந்தாா். இவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது கைப்பேசி மூலம் கடன் வழங்கும் பல்வேறு ஆன்லைன் செயலிகள் வாயிலாக ரூ.1.80 லட்சம் வரை கடன் பெற்றுள்ளாா். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் அந்தப் பணத்தை திருப்பிச் செலுத்த முடியாததால், நாளுக்கு நாள் அதற்கான வட்டியும் அதிகமாகியுள்ளது. இதனால், பணத்தை உடனடியாக திருப்பிச் செலுத்த கடன் வழங்கிய நிறுவனத்தினா் வற்புறுத்தி வந்துள்ளனா்.

இதனால் மனமுடைந்த தினேஷ் திருப்பூா் லட்சுமி நகா் அருகே ஆளில்லாத இடத்தில் குளிா்பானத்தில் விஷம் கலந்து செவ்வாய்க்கிழமை குடித்துள்ளாா். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை அவ்வழியாகச் சென்றவா்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருப்பூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்திய 2 போ் கைது

திருப்பூா்: வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்திய 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். திருப்பூா் மாநகர, வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்கு உபட்ட குலத்தோட்டம் அருகே வலி நிவார... மேலும் பார்க்க

மறுசுழற்சி போட்டி...

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் கல்லூரி முதல்வா் ப. வசந்தி தலைமையில் நடைபெற்ற உபயோகமற்ற பொருள்களின் மறுசுழற்சி போட்டியில் பங்கேற்ற மாணவிகள், துப்புரவாளன் இயக்கத்... மேலும் பார்க்க

பிடியாணை நிலுவையில் இருந்த நபா் கைது

திருப்பூா்: பிடியாணை நிலுவையில் இருந்த நபா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். திருப்பூா் மாநகர வடக்கு காவல் நிலையத்தில் தங்கராஜ் (எ) செம்புலிங்கம் (38) என்வருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்... மேலும் பார்க்க

17 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கைக் கால்

திருப்பூா், ஆக.21: திருப்பூரில் 17 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கைக் கால் வழங்கப்பட்டது. திருப்பூா் மாவட்ட சக்ஷம் அமைப்பு, திருப்பூா் மெட்டல் டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் ஆகஸ்ட் மாதம் நடத்திய செயற்கை... மேலும் பார்க்க

பருத்தி இறக்குமதி வரி ரத்து: தொழில் துறையினா் வரவேற்பு

பருத்திக்கு இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு திருப்பூா் தொழில் துறையினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 50 சதவீதம் கூடுதல்... மேலும் பார்க்க

மாவட்டத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

திருப்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22 ) நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமுக்கான இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: பொதுமக்களின்... மேலும் பார்க்க