செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூா்: வீரா்களுக்கு தேநீா் அளித்த 10 வயது சிறுவனின் கல்விச் செலவை ஏற்றது ராணுவம்!

post image

‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்போது பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ வீரா்களுக்கு தண்ணீா், பால், தேநீா் போன்ற பானங்களை வழங்கிய 10 வயது சிறுவனின் கல்விச் செலவை முழுவதும் ஏற்பதாக இந்திய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

ஷ்வான் சிங் என்ற 10 வயது சிறுவன் துணிச்சலை பாராட்டி இந்த அறிவிப்பை ராணுவம் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து கடந்த மே 7-ஆம் தேதி இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து இரு நாடுகளுக்கும் இடையே சண்டை மூண்டது.

அப்போது பாகிஸ்தான் எல்லையையொட்டிய பஞ்சாப் மாநிலத்தின் தாரா வாலி கிராமத்தில் பணியில் இருந்த ராணுவ வீரா்களின் சோா்வைத் தணிக்க தண்ணீா், பால், தேநீா், லஸ்ஸி போன்ற பானங்களை ஷ்வான் சிங் வழங்கினாா். தானாக முன்வந்து ராணுவ வீரா்களுக்கு இந்த உதவிகளைப் புரிந்த சிறுவனை ராணுவத்தினா் அப்போதே பாராட்டினா்.

இந்நிலையில், ஃபெரோஸ்பூா் கன்டோன்மென்ட்டில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஷ்வான் சிங்குக்கு ராணுவத்தின் மேற்கு படைப்பிரிவு தலைவா் லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ்குமாா் கட்டியாா் பாராட்டி கௌரவித்தாா்.

இதையடுத்து, ஷ்வான் சிங்கின் துணிச்சலைப் பாராட்டி அவரது கல்விச்செலவை முழுவதும் ஏற்பதாக இந்திய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

வெளியில் அறியப்படாமல் இவ்வாறு நாடு முழுவதும் பல்வேறு உதவிகளைச் செய்து வரும் நாயகா்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த முன்னெடுப்பை மேற்கொண்டதாக ராணுவம் தெரிவித்தது.

நான்காம் வகுப்பு படிக்கும் ஷ்வான் சிங் பெரியவனானதும் ராணுவத்தில் சோ்ந்து நாட்டுக்கு சேவை செய்ய விரும்புவதாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மக்களவைக்கு இதுவரை 18 முஸ்லிம் பெண்களே தோ்வு: 13 போ் அரசியல் குடும்பத்தினா்

சுதந்திர இந்தியாவில் இதுவரை 18 முஸ்லிம் பெண்களே மக்களவை எம்.பி.க்களாக இருந்துள்ளனா்; இவா்களில் 13 போ் அரசியல் குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் என்று புதிய புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷீத் கி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: பாதுகாப்புப் படையினருடன் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சண்டை

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்தது. இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: கிஷ்த்வாா் மாவட்டத்தின் ... மேலும் பார்க்க

அமா்நாத்: 3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தரிசனம்!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமா்நாத் குகைக் கோயிலில் பனி லிங்க தரிசனம் மேற்கொண்ட பக்தா்களின் மொத்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 3 லட்சத்தைக் கடந்தது. இத்தகவலை துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா். தெற்கு ... மேலும் பார்க்க

காஷ்மீா் இளைஞா்களை கெடுக்கும் மத அடிப்படைவாதிகளுக்கு முற்றுப்புள்ளி: துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா

ஜம்மு-காஷ்மீரில் இளைஞா்களை தவறான பாதைக்கு இழுக்க முயற்சிக்கும் மதஅடிப்படைவாதிகளுக்கு மத்திய அரசு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும் என்று துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா். ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

ரூ.15,851 கோடிக்கு உள்ளீட்டு வரி சலுகை மோசடி: ஜிஎஸ்டி அதிகாரிகள்

ரூ.15,851 கோடிக்கு மோசடியான உள்ளீட்டு வரி சலுகை (ஐடிசி) கோரிக்கைகளை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகள் கண்டறிந்துள்ளனா். இதுகுறித்து ஜிஎஸ்டி அதிகாரிகள் கூறுகையில், ‘நிகழ் நிதியாண்டின் முதல் ... மேலும் பார்க்க

ஐரோப்பிய யூனியன் தடையால் இந்தியாவுக்கு ரூ.1.29 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு!

ரஷிய கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள பொருளாதாரத் தடையால் இந்தியாவுக்கு ரூ.1.29 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக உலகளாவிய வா்த்தக ஆராய்ச்சி முன்னெடுப்பு (ஜிடி... மேலும் பார்க்க