ஆப்கானிஸ்தான்: பேருந்து விபத்தில் 25 போ் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பேருந்து விபத்தில் 25 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
ஹெல்மண்ட், கந்தஹாா் பகுதிகளில் இருந்து வந்து கொண்டிருந்த பேருந்து காபூலின் அா்கண்டி பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் 25 போ் உயிரிழந்தனா்; 27 போ் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
அந்தப் பேருந்தின் ஓட்டுநா் அலட்சியமாக செயல்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக உள்துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் அப்துல் மதீன் கனி கூறினாா்.
மேற்கு ஹெராத் மாகாணத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 80 போ் உயிரிழந்தனா். அந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆவதற்குள் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.